சுந்தர் சி. இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் படம் மூக்குத்தி அம்மன் 2. படத்தை குஷ்பு சுந்தர், ஐசரி கணேஷ், நயன்தாரா ஆகியோர் இணைந்து தயாரிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி பூஜை மற்றும் படப்பிடிப்பும் தொடங்கியது.இப்படத்தின் ஆரம்ப கட்டத்திலேயே நயனுக்கும் சுந்தர் சிக்கும் இடையே சம்பளம் குறித்து ஏற்பட்ட கருத்து மோதல் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது . மேலும் நயனுக்கு பதில் தமண்னா அல்லது மீனாவை நடிக்க வைக்க சுந்தர்.சி முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் காஸ்டியூம் தொடர்பாக உதவி இயக்குநரை படப்பிடிப்பு தளத்தில் மோசமாக திட்டியதாகவும், அதை பார்த்த சுந்தர் சி. கோபம் அடைந்து படப்பிடிப்பை நிறுத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து நடிகை குஷ்பு தனது இணைய பக்கத்தில்,”சுந்தர் சியின் நலம் விரும்பிகள் அனைவருக்கும். மூக்குத்தி அம்மன் 2 பற்றி பல தேவையற்ற வதந்திகள் இணையத்தில் உலவி வருகிறது. அது உண்மையில்லை படப்பிடிப்பு திட்டமிட்டபடி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுந்தர் சி எப்படிப்பட்ட இயக்குநர் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும், அதேபோல, நயன்தாரா ஒரு திறமையான நடிகை, அதை அவரே நிரூபித்துள்ளார். கடந்த காலத்தில் அவர் நடித்த ஒரு கதாபாத்திரத்தில், மீண்டும் நடித்து வருகிறார். இணையத்தில் பரவும் இந்த வதந்திகள் “திருஷ்டி எடுத்த மாதிரி”. நடப்பதெல்லாம் நன்மைக்கே நடக்கும். உங்களின் ஆசீர்வாதம் மற்றும் அன்பு மட்டுமே நாங்கள் நம்புகிறோம். எனவே நிதானமாக இருங்கள், மேலும் எண்டர்டெயின்மென்ட் மன்னரின் மற்றொரு பிளாக்பஸ்டருக்காக காத்திருங்கள் என பதிவிட்டுள்ளார்.













