தமிழில் சுந்தரபாண்டியன், பிகில், ஜிகர்தண்டா, தர்மதுரை, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என பல படங்களில் நடித்திருப்பவர் சௌந்தரராஜா. கட்டிங் கேஸ் என்ற மலையாள படத்தில் வில்லன் கதாபாத்திரத்திலும், சாயாவனம் என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது இந்நிலையில் நடிகர் சௌந்தரராஜா நடிப்பு என்பதையும் தாண்டி, சமூகம் சார்ந்து பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். அந்த வகையில், இவர் ‘மண்ணுக்கும் மக்களுக்கும்’ என்ற அறக்கட்டளை சார்பில் மரங்களை நடுவது மற்றும் பொது மக்களுக்கு உதவும் வகையில், பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.நடிப்பு மற்றும் சமூக பணி என பிசியாக சுழன்று கொண்டிருக்கும் நடிகர் சௌந்தரராஜாவுக்கு நோர்வா தமிழ் திரைப்பட விருது விழாவில் “கலைமகன் 2025” என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
திரைப்படங்கள் கடந்து சமூக பணிகளில் ஈடுபட்டு வருவதை பாராட்டி இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து நடிகர் சௌந்தரராஜா கூறுகையில்,, “நான் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் நடிகனாக 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துக் கொண்டு இருக்கிறேன்.இந்த விருது எனக்கு புதிய உத்வேகத்தையும் புத்துணர்ச்சியும் கொடுத்து இருக்கிறது. எனக்குக் கிடைத்த இந்த விருதை, உலகெங்கும் உள்ள நேர்மையான இயற்கை விவசாயிகளுக்குச் சமர்ப்பிக்கிறேன்,” என்று தெரிவித்தார்.