Friday, May 15, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

யோகிபாபு பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள் – கலைப்புலி தாணு !!

admin by admin
May 9, 2025
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி தயாரிப்பில், நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் “ஜோரா கைய தட்டுங்க”. இப்படத்தில் ஹரிஸ் பேரடி, வசந்தி, ஜாகிர் அலி, மணிமாறன், சாந்தி தேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு எஸ்.என். அருணகிரி இசையமைத்துள்ளார். இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர் மது அம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் மே 16 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்mதயாரிப்பாளர் ஜாகிர் அலி பேசியதாவது…
நான் ஒரு மலையாளி, தமிழ் மீதான நம்பிக்கையில், யோகிபாபு மீதான அன்பில், இப்படத்தை எடுத்துள்ளோம். நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். யோகிபாபு இப்படத்திற்கு மிகப்பெரும் ஆதரவாக இருந்தார். இப்படம் மே 16 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
தயாரிப்பாளர் ஜாகிர் அலிக்கு வாழ்த்துகள். மது அம்பாட் இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர், அவர் இப்படத்தில் வேலை பார்த்துள்ளது பெருமை. அவர் எப்போதும் தேர்ந்தெடுத்துத் தான் படம் செய்வார். இது இப்படத்திற்குப் பெருமை. எல்லோரும் மிகவும் தன்னடக்கமாக இருக்கிறார்கள். யோகிபாபு பல சின்ன பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நடிக்கிறார். இது சினிமாவுக்கு நல்லது. எனக்கு இன்னும் படம் காமிக்கவில்லை, டிரெய்லர் நன்றாக உள்ளது. படமும் நன்றாக இருக்குமென நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள். யோகிபாபுவை கலகலப்பு படத்திலிருந்து பார்க்கிறேன், அவரது இந்த உயரத்திற்கு கடின உழைப்பு தான் காரணம். யோகிபாபு புரமோசன் வருவதற்கு 7 லட்சம் கேட்கிறார் என புகார் கூறுகிறார்கள், ஆனால் அவர் அப்படியில்லை என எனக்குத் தெரியும். அவர் 1 நாள் நடித்த படத்திற்குக் கூப்பிடுவது எல்லாம் அழகல்ல. அவர் பல படங்களுக்கு புரமோசனுக்கு வருகிறார். அவரைப் பற்றி தப்பாகப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

You might also like

மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின்  ‘வேலும் மயிலும்’ ஆல்பம்!

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

இயக்குநர் விநீஷ் மில்லினியம் பேசியதாவது…
நான் கொஞ்சம் மலையாளி, மலையாளத்தின் தாய்மொழி தமிழ் தான். 2013 ல் புதுமுகங்களின் முயற்சியில் தீக்குளிக்கும் பச்சை மரம் படம் எடுத்தேன் பலருக்குத் தெரிந்திருக்கும். அப்போது என்னிடம் 400 பேர் நடிக்கக் கேட்டு வந்தார்கள், அப்போது ஒருவர் என்னிடம் வந்திருந்தார், அவருக்கு ஒரு நாள் 1000 ரூபாய் சம்பளம் பேசி 25 நாள் நடிக்கச் சொன்னேன், ஆனால் நான் நிறையப் படம் நடித்துள்ளேன், எனக்கு 2000 சம்பளம் தாருங்கள் என்றார், ஆனால் நான் நடிக்க விருப்பமிருந்தால் நடி இல்லையென்றால் ஓடிவிடு என்றேன். அவர் தான் யோகிபாபு. ஆனால் சில வருடம் கழித்து நான் போன் செய்த போது, அன்போடு என்னை அழைத்துப் பேசினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் படம் செய்யப்போகிறேன் என்று சொன்ன போது, கதையெல்லாம் சொல்ல வேண்டாம், உங்களுக்காக நடிக்கிறேன் எனச் சொன்னார். அவருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். இந்தப்படம் கண்டிப்பாக அவரது நடிப்பில் மிக வித்தியாசமான படமாக இருக்கும். மது அம்பாட் சார் இப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவார், இப்போது சொன்னாலும் மலை ஏறுவார். இந்தியாவின் சிறந்த ஒளிப்பதிவாளர் என் படத்தில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எனக்குத் தமிழில் முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர் தாணு சாருக்கு நன்றி. தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. என்றார்.

கலைப்புலி தாணு பேசியதாவது…
இப்படத்தின் டிரெய்லர் பாடல்களை முன்பே பார்த்து விட்டேன். நண்பர் தயாரிப்பாளர் ஜாகிர் அலியை வரவேற்கிறேன். யோகிபாபு எல்லோருக்கும் நல்லவராகத் தான் இருக்கிறார். நான் போன் செய்தபோது, ஒரு தயாரிப்பாளருக்குப் பணமே வாங்காமல் நடித்துத் தந்தார். அவரது பெயருக்குக் களங்கம் வரக்கூடாது. இந்தப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

நடிகர் யோகிபாபு பேசியதாவது…,”தயாரிப்பாளர் ஜாகிர் அலி மிகவும் கஷ்டப்பட்டு இப்படம் செய்துள்ளார், என்னால் இல்லை, அதற்கு வேறு பல காரணங்கள், ஆனால் படத்தை நன்றாக எடுத்துள்ளார். இயக்குநர் விநீஷ் சார் சொன்னது உண்மை தான். தீக்குளிக்கும் பச்சை மரம் 2013ல் நடித்தேன், 1000 ரூபாய் சம்பளம். மீண்டும் பல வருடம் கழித்து போன் செய்து அவர் பேசியவுடனே சொல்லுங்கள் விநீஷ் சார் என்றவுடன் ஆச்சரியப்பட்டார். நான் எப்போதும் பழசை மறக்க மாட்டேன். நான் எல்லோருக்கும் சப்போர்ட் செய்து தான் நடித்துக்கொண்டிருக்கிறேன். என்னிடம் உதவியாளராக இருந்தவர் ஹீரோவாக நடித்தார் அந்தப்படத்தில் ஒரு நாள் நடித்தேன், அந்தப்படத்திற்குத் தான் 7 லட்சம் கேட்டேன் எனப் புகார் சொல்லியுள்ளார்கள். இது நான் நடித்த படம் அதனால் நான் வரவேண்டும், வந்துள்ளேன். நான் என் சம்பளத்தை, நிர்ணயிப்பதில்லை, ஆனால் எனக்குச் சொன்ன சம்பளம் வருவதே இல்லை. எனக்கு வர வேண்டிய சம்பளம் மிகப்பெரிய லிஸ்ட் இருக்கிறது, அதனால் யாரும் தவறாகப் பேசாதீர்கள். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது எல்லோரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

admin

admin

Related Posts

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!
News

மீரா கதிரவனின் ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழ்!

by admin
May 14, 2026
‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!
News

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின்  ‘வேலும் மயிலும்’ ஆல்பம்!

by admin
May 14, 2026
‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!
News

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

by admin
May 14, 2026
ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!
News

ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

by admin
May 14, 2026
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!
News

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!

by admin
May 13, 2026

Recent News

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸின்  ‘வேலும் மயிலும்’ ஆல்பம்!

May 14, 2026
‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீடு!

May 14, 2026
ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

ராம்சரணின் ‘பெத்தி’ திரைப்படத்தை ஹொம்பாலே ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

May 14, 2026
பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!

பாராட்டுக்களைக் குவிக்கும் ‘அங்கீகாரம்’ படத்தின் டிரெய்லர்!

May 13, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?