ஆரஞ்ச் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராஜேஷ் பத்மநாபன்,சுஜாதா ராஜேஷ் தயாரித்துள்ள புதிய படம், “வானரன்”. சந்தானம் நடித்த ‘சர்வர் சுந்தரம்’, பிரபுதேவா நடித்த ‘பொன் மாணிக்கவேல்’ ஆகிய படங்களில் நடித்த நாகேஷ் பேரன் பிஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அக்ஷயா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர்,ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் உள்பட பலர் நடித்துள்ளனர்.
பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் கதைகளத்தையும் கொண்டு உருவாகி உள்ள படம்தான் வானரன் என்கிறார் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ள ஸ்ரீராம் பத்மநாபன்.. இப்படத்தின் ஒளிப்பதிவை நிரன் சந்தர் கவனிக்க, ஷாஜகான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை பத்மா கந்தசாமி எஸ்டேட்ஸ் சார்பில் ராமாபுரம் எம்.கே ராஜேஷ் வெளியிடுகிறார்.இப்படத்தின் அனைத்து தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து விரைவில் திரைக்கு வர தயாராக உள்ள நிலையில் வரும் மே16 ல் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடக்க உள்ளது என்கிறது படக்குழு.