
யாருங்க இந்த குஞ்சாட்டா ?
இது நடிகை ஊர்வசியின் மகளது செல்லப்பெயர். தேஜ லட்சுமி என்பதுதான் பெயர் . அனைவரும் செல்லப்பெயரால் தான் அழைப்பார்கள்.
இவர் ஊர்வசிக்கும் முதல் கணவர் மனோஜ் கே . ஜெயனுக்கும் பிறந்தவர். இவர் நாயகியாக விரைவில் அறிமுகம் ஆகப்போகிறார் . அம்மைக்கும் இஷ்டம்தான்.
ஜெயனுடன் விவாகரத்து ஆனதும் டைரக்டர் சிவபிரசாத் என்பவரை ஊர்வசி மணமுடித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார் . இவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். நடிப்பில் கில்லாடியாக இருக்கிற ஊர்வசியின் மகள் குஞ்சாட்டாவும் அம்மையைப் போல வருவாரா ?
ஆவலுடன் அரங்கேற்றத்தை ஆடியன்ஸ் எதிர்பார்க்கிறார்கள்.












