
“சேயோன் மேய மைவரை உலகம் “என்பது தொல்காப்பியம்.
சேயோன் என்றால் குன்றத்து தலைவன் முருகன் என்கிறது தமிழ். அது திருப்பரங்குன்றமாக இருந்தாலும் ,திருத்தணியாக அமைந்தாலும் பழம் நீயாக கணிந்தாலும் முருகனின் ஆட்சிக்குள் வந்து விடும். காலம் அறிந்துதான் கமல்ஹாசன் கதையைத் தேர்வு செய்து அதன் நாயகனாக சிவ கார்த்திகேயன் கையில் வெட்டரிவாளை கொடுத்திருக்கிறார். எல்லாம் முருகனின் திருவிளையாடல்.!
அமரன் வெற்றிப் பட நாயகனை தனது ராஜ்கமலுக்குள் கொண்டு வந்திருப்பது மற்றும் ஒரு சாதனையை நிகழ்த்தத்தான் என்பதை சேயோன் படக்குழு உணர்த்துகிறது.சிவகுமார் முருகேசன் படத்தின் இயக்குநர். எப்படியெல்லாம் பெயர் பொருந்துகிறது பாருங்கள். 
மயிலாசனம் ,நெற்றியில் வெற்றித் திருநீறு குங்குமம், உருத்திராட்ச மாலை ,பெரிய வெட்டருவா .”வீரம் உண்டு,வெற்றி உண்டு.”மணிவாசகம். சிவந்த நிறமுடையன் என்பது குறிஞ்சித்தலைவனின்தோற்றம். சரியான ஆள்தான் சிவா கார்த்திகேயன்.
குன்றத்து நாயகனை தலைப்பில் கொண்டாடுகிற இந்த கதையில் குன்றம் உயர்ந்தது :கோடு சாய்ந்தது போன்ற அரசியல் இருக்குமா?
அரசியல் இல்லாமலா ? கமல்ஹாசனின் எல்லாப்படங்களுமே அரசியல் பேசியவைதான்.இது கிராமத்துக் கதை. காவல் நிலையத்து பின்னணி பேசுகிறது.சிவாவின் பிறந்த நாள் பரிசு. எல்லாம் ஏழாம் நம்பர் ராசி,
கதைக்கு இசை சந்தோஷ் .ஒளிப்பதிவு விவேக்.ஏபி.இன்டர்நேஷனல் விநியோக உரிமை.எல்லாமே சிறப்பாக முடிந்து இருக்கிறது.
எப்போது படப்பிடிப்பு?












