‘வெளவல்ஸ்’, இது ஒரு ஆந்தாலஜி வகையிலான திரைப்படம். அதாவது, ஒரு காதல் உணர்வு. அந்த உணர்வினை 5 இயக்குநர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்த ஒரு தொகுப்பு. இதில், யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கீர்த்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்க, சரவணா சுப்ரமணியம் இசையமைத்துள்ளார். திலிப்குமார், ஹேமந்த் குமார், சங்கீத், சந்தோஷ் ரவி, ஜகன் ராஜேந்திரன் ஆகிய இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். ‘ரித்தி சித்தி ஃபிலிம்ஸ்’ சார்பில், ராஜு ஷ்ரீகர் தயாரித்துள்ளார்.
‘வெளவல்ஸ்’ திரைப்பட தொகுப்பில், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளும் இளைஞனை, அதிலிருந்து காப்பாற்றி அறிவுரை சொல்லும் அந்தப் பகுதி ரசிக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது. யூகி சேதுவின் நக்கல், நையாண்டித்தனமான வசனங்களும், நடிப்பும் அனைவரையும் கவர்கிறது. அதைப்போலவே கடைசியில் இடம்பெறும் ஆக்ஷன் தொகுப்பும் ரசிக்க வைக்கிறது. மற்ற தொகுப்புகள் வெகுவாக கவரவில்லை. என்று தான் சொல்ல வேண்டும்.

யூகி சேது, சின்னி ஜெயந்த், ராஜ் ஐயப்பா, சம்யுக்தா விஸ்வநாதன், நண்டு, தீபக் ரமேஷ், பரமேஷ், காஜல் செளத்ரி, பீட்டர்.கே, சரத் ரவி, அக்ஷிதா போபையா, பிரியங்கா சந்திரசேகர், பரத் போபண்ணா, விஜிதா வசிதா ஆகியோர் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் கீர்த்தன் பூஜாரி மற்றும் சந்தீப் அல்லூரி இருவரும், ஓவ்வொரு கதைக்கும் வித்தியாசமான லைட்டிங் மற்றும் கோணங்களில், குறிப்பிடும்படி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். சரவணா சுப்பிரமணியத்தின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. கடைசியாக இடம் பெறும் தொகுப்பில், இசை வெகுவாக கவர்கிறது.
காதலை வித்தியாசமான முறையில் ஐந்து இயக்குநர்களும் ஒன்று சேர்ந்து ஒரு புதிய முயற்சியை செய்திருப்பதற்காக பாரட்டலாம். அதை இன்னும் சுவாரசியாமாக சொல்லியிருந்தால் எல்லோராலும் ரசிக்கப்பட்டிருக்கும். ஒரே மாதிரியான படங்களை பார்த்து அலுத்து போனவர்களுக்கு இது சற்று வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.












