Tuesday, July 28, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home Reviews

‘எக்ஸாம்’  – (விமர்சனம்.) விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!

admin by admin
May 16, 2026
in Reviews
429 4
0
600
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

சில வாரங்களுக்கு முன்னர் நடை பெற்ற நீட் தேர்வு (NEET – National Eligibility cum Entrance Test) முறைகேடு, இந்தியா முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி மிகப்பெரும் பேசுபொருளாக ஆகியிருப்பது அனைவரும் அறிந்ததே. அது போன்ற சம்பவத்தினை அதாவது அரசு நடத்து TNPSC – UPSC போன்ற தேர்வுகளில் நடக்கும் மோசடிகளை தனது கற்பனை கலந்து, எழுதி இயக்கியிருக்கிறார், ஏ. சற்குணம். இந்தத்தொடரில், துஷாரா விஜயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்க, அவருடன் அதிதி பாலன், அப்பாஸ், நரேன் மணி, துரை சுதாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘எக்ஸாம்’  –  இணையத்தொடர், அமேசான் பிரைம் வீடியோவில் (Amazon Prime Video) வெளியாகியிருக்கிறது.

You might also like

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

‘அருள்வான்’ – விமர்சனம்!

‘அன்பே  டயானா’ – விமர்சனம்!

உதகம் மலை, ‘தைக்காரா’ பகுதிக்கு ‘டிஎஸ்பி’ யாக புதிதாக பொறுப்பேற்க காட்டுப்பகுதிக்குள் தனியாக ஜீப்பில் பயணிக்கிறார், அதிதி பாலன். அப்போது,  துஷாரா விஜயன் அவரைக் கடத்தி தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, அவரது பதவியில் ஆள்மாறாட்டம் செய்து பொறுப்பேற்கிறார். அந்தப்பகுதியில் நடக்கும் போட்டித்தேர்வில் சதி நடக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது துஷாரா விஜயனுக்கு தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன செய்தார்? அதிதி பாலனை கடத்தி, ஏன் ஆள்மாறாட்டம் செய்தார்? என்பது தான்,  ‘எக்ஸாம்’ இணையத்தொடர்.

‘எக்ஸாம்’  ஒரு விறு விறுப்பான க்ரைம் த்ரில்லர். என்பதை முதல் பகுதியிலேயே சொல்லப்பட்டு விடுகிறது. ஏழு பகுதிகளைக் கொண்ட இந்தத் தொடர், அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை, சிறிதும் சோர்வில்லாமல் அடுத்தடுத்த பகுதிகளில் விறுவிறுப்பு சேர்ந்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு காட்சியையும் ரசிக்கும்படி அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு பகுதியிலும் காட்சிகள் பரபரப்பாக செல்கிறது. ஒரு சில இடங்களில் குறைகள் இருந்தாலும் அது பெரிதாக தெரியவில்லை.

இந்தியாவில் அரசாங்க பணிகளுக்காக நடக்கும் போட்டித்தேர்வுகளில், முறைகேடு சர்ச்சை குறித்த செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருப்பதை செய்திகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அதற்கு அண்மையில் நடந்த நீட் தேர்வு (NEET – National Eligibility cum Entrance Test) குறித்த பத்திரிக்கை செய்திகளே சாட்சி.

ஜான்சி,  கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துஷாரா விஜயன் சிறப்பாக நடித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் தனிக்கவனம் பெறுகிறார். அவரைப் போலவே மரமல்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிதி பாலனும் நன்றாகவே நடித்திருக்கிறார். அப்பாஸ், நரேன் மணி , துரை சுதாகர் உள்ளிடோரும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.

க்ரைம், த்ரில்லருக்கான சாம் சி.எஸ் பின்னணி இசை, காட்சிகளுக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது. அருண் அமரேந்திரனின் ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்திருக்கிறது. முதல் மூன்று தொடர்களை போல் அனைத்தும் இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில், ‘எக்ஸாம்’ – விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர்!

admin

admin

Related Posts

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!
Reviews

‘ஜனநாயகன்’ – விமர்சனம்!

by admin
July 23, 2026
‘அருள்வான்’ – விமர்சனம்!
Reviews

‘அருள்வான்’ – விமர்சனம்!

by admin
July 17, 2026
‘அன்பே  டயானா’ – விமர்சனம்!
Reviews

‘அன்பே  டயானா’ – விமர்சனம்!

by admin
July 17, 2026
‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!
Reviews

‘ஐ, நோபடி’ (I, Nobody)  – விமர்சனம்!

by admin
July 11, 2026
‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!
Reviews

‘லவ் ஓ லவ்’ – விமர்சனம்!

by admin
July 11, 2026

Recent News

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

ஆகஸ்ட் 7-ல் வெளியாகும் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்!

July 27, 2026
திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற  வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

திருமண வாழ்க்கை விதிகளை தலைகீழாக மாற்ற வரும், “ பியார் பிரேமா கல்யாணம்” !

July 27, 2026
நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!

நடன இயக்குநர் ஸ்ரீதர் மாஸ்டரின் ‘டான்ஸ் டான் 2’ நிகழ்வு!

July 27, 2026
கிராமத்து மக்களை மிரட்டும் ‘பவானி’ பேய்!

கிராமத்து மக்களை மிரட்டும் ‘பவானி’ பேய்!

July 27, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?