கடந்த 2018 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியானப் படம் ‘மன்னர் வகையறா’. இப்படத்தை தயாரிக்க நடிகர் விமல், அரசு பிலிம்ஸ் பைனாஸ்சியர் கோபி என்பவரிடமிருந்து ரூ. 4.5 கோடி கடனாகப் பெற்றதாகவும் .படம் வெளியான பிறகு, அந்த தொகையை நடிகர் விமல் காசோலையாக வழங்கியிருக்கிறார்.
அந்த காசோலையை பைனாஸ்சியர் கோபி வங்கியில் செலுத்தியபோது, விமல் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பி வந்தது. இதனைத்தொடர்ந்து பைனாஸ்சியர் கோபி , நடிகர் விமல் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், .இந்த வழக்காய் விசாரித்து வந்த நீதிபதி ஆர்த்தி இன்று தீர்ப்பு அளித்திருக்கிறார். அதில், “விமலுக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.எனவே, அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனைய விதிக்கிறேன். வாங்கிய செக் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்றும் தீர்ப்பளித்துள்ளார். இதயடுத்து நடிகர் விமல் சார்பில்,., மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது . இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்












