நடிகை ராதாவுக்கு சொந்தமான, கையொப்பமிடப்பட்ட வெற்று காசோலைகளை அவருக்கு தெரியாமல் எடுத்து, சுமார் ரூ. 46 கோடி அளவில் முறைகேடு நடந்துள்ளதாக, தன் அக்கா நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுன குஞ்சன் நாயர் மீது நடிகை ராதா, சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ள நிலையில்,
இவ்விவகாரம் குறித்து நடிகை அம்பிகா இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,”“ராதா தொடர்ந்த வழக்கு குறித்து செய்திகளில் ரூ.43 கோடி, ரூ.46 கோடி என ஒவ்வொரு முறையும் வெவ்வேறு தொகையை அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். ராதா எனக்கு காசோலை வழங்கியது உண்மை. அந்த காசோலையை அவரே நிறுத்தி வைத்தார் என்பதும் உண்மை. ஆனால் அதற்கான காரணத்தை ராதா ஏன் சொல்லவில்லை?.ஏ.ஆர்.எஸ். கார்டன்ஸ் நிறுவனம் எனது குழந்தை போன்றது. அதற்கு பெயர் வைத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்.தான்.நான் சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்று பார்த்தபோது, ஏ.ஆர்.எஸ். கார்டன்ஸ் என்ற பெயர் இல்லாமல் வேறு பெயர் இருந்தது. நான்கலங்கிப் போய்விட்டேன். என் பெயரை நீக்கி விட்டனர்.
நான் என்ன செத்தா போய் விட்டேன்?அந்த நிறுவனத்தில் பங்கு விவகாரம் தொடர்பான நீண்ட நாட்களாக பிரச்சினை போய்க்கொண்டிருக்கிறது.ஏ.ஆர்.
செக்கில் கையெழுத்து போட்டு விட்டு அதை ஏன் அவர் என் வீட்டில் வைக்க வேண்டும்?. பணம் போனது எனக்கு. செக் பவுன் ஆனதற்காக நான் தான் வழக்கு போட்டிருக்க வேண்டும்.நான் உண்மையை சொன்னால் ராதா தான் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும், அவர் செல்போனில் அழைத்தபோது நான் எடுக்கவில்லை என்று சொல்கிறார். அவரது மகளின் திருமணத்தில் முன்னாள் நின்று எல்லா வேலைகளையும் இளைத்துபோட்டுக்கொண்டு ஒரு வேலைக்காரி மாதிரி வேலை செய்து கொண்டிருந்தேன். அவர் செல்போனில் அழைத்தால் நான் ஏன் எடுக்காமல் இருக்க வேண்டும்?.வீட்டு விஷயத்தை வீட்டுக்குள்ளேயே வைத்து முடிக்கலாம் என்று நினைத்தேன்.தவறு செய்து விட்டு,முந்திக்கொள்வதைப்போலரா
எங்க அம்மா நாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என விரும்பினார்.ஆகையால் சமரசம் பேச நினைத்தால் பேசலாம்.என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், படிக்காதவன் படத்தில் இடம்பெற்ற , ‘பணம் காசை கண்டுபுட்டா புலி கூட புல்லை தின்னும்’ என்ற பாடலை ராதாவிற்காகத் தான் வைத்தேன். ராதா எனக்கு கொடுக்க வேண்டிய பணத்திற்காக தான் 3 காசோலைகளை கொடுத்தார்.திருடியதாக சொன்னதை தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ” இவ்வாறு அவர் கூறுகையில் கண் கலங்கினார்












