Saturday, September 12, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home General News

சாலமன் பாப்பையா காலமானார்! தலைவர்கள் இரங்கல்!!

admin by admin
September 11, 2026
in General News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் இன்று காலமானார்..அவரது உடல், மதுரை ஆரப்பாளையம் அடுத்துள்ள ஞானஒளிபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் தலைவர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.நாளை பிற்பகல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட இருப்பதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறை வுக்கு தமிழக கவர்னர் ,முதலமைச்சர்விஜய், திமுக தலைவர் முக ஸ்டாலின், அதிமுக பொது செயலாளர் எட்டப்படிபழனிசாமி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

சாலமன் பாப்பையா மறைவுக்கு தமிழக முதலமைச்ச ர் தனது எக்ஸ் தள பதிவில், “நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்ததோடு, பட்டிமன்றங்களை வெறும் பொழுதுபோக்கு நிகழ்வுகளாக அல்லாமல், சிந்தனையைத் தூண்டும் அறிவுத் தளங்களாக மாற்றியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.அவரது மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு” என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

“கிளிகளிடம் முதலீடு செய்ய மாட்டோம்” – அமன் குப்தா அதிரடி!

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் ! அறிவிப்பு வெளியானது!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்:
“உலகெங்கும் வாழும் தமிழர்களின் பேரன்பைப் பெற்ற பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் ஆற்றொணாத் துயரும் அடைந்தேன்.பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் பாப்பையாவின் பட்டிமன்றத்தோடுதான் தமிழர்களுக்குத் தொடங்கும் எனும் அளவுக்குத் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்துவிட்ட பெருமைக்குரியவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா.”கடந்த ஆண்டு மே மாதம் மக்கள் சந்திப்புக்காக மதுரை சென்றிருந்தபோது அவரது வீட்டு வாசலுக்கு வந்து என்னை வரவேற்றார். இன்று நம்மை விட்டுப் பிரிந்ததை மனம் ஏற்க மறுக்கிறது.” என்றும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்

மதுரை திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடியில் 1936ஆம் ஆண்டு சாலமன் பாப்பையா பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார்.தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதையும் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் சாலமன் பாப்பையா பெற்றுள்ளார்.நடுவராக மட்டுமன்றி எழுத்தாளராக ‘புறநானூறு புதிய வரிசை வகை’, ‘பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஒரு பார்வை’, ‘திருக்குறள் உரையுடன்’ எனப் பல்வேறு நூல்களை சாலமன் பாப்பையா எழுதியுள்ளார்.

admin

admin

Related Posts

“கிளிகளிடம் முதலீடு செய்ய மாட்டோம்” – அமன் குப்தா அதிரடி!
General News

“கிளிகளிடம் முதலீடு செய்ய மாட்டோம்” – அமன் குப்தா அதிரடி!

by admin
July 23, 2026
கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி!
General News

கேலோ இந்தியா அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங் தேசிய லீக் 2025–2026 போட்டி!

by admin
April 1, 2026
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் ! அறிவிப்பு வெளியானது!!
General News

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் ! அறிவிப்பு வெளியானது!!

by admin
March 15, 2026
தொகுதி பங்கீடு:  மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!
General News

தொகுதி பங்கீடு: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை!

by admin
March 4, 2026
மகளிர் கிறித்தவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற உலகநாயகன்!
General News

மகளிர் கிறித்தவக் கல்லூரி நிகழ்வில் பங்கேற்ற உலகநாயகன்!

by admin
February 14, 2026

Recent News

ஜிவி பிரகாஷுக்கு ‘RX100’ பைக் பரிசு!

ஜிவி பிரகாஷுக்கு ‘RX100’ பைக் பரிசு!

September 11, 2026
தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ !

தீபாவளி திருநாளில் வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’ !

September 10, 2026
நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் மீது  அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!

நடிகர் சிவகுமார் குடும்பத்தினர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை!

September 10, 2026
தேசிய, மாநில, சர்வதேச விருதுகள் பெற்ற அப்புக்குட்டி!

தேசிய, மாநில, சர்வதேச விருதுகள் பெற்ற அப்புக்குட்டி!

September 10, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?