Tuesday, October 6, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பயோபிக் என்றாலே தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!

admin by admin
October 4, 2026
in News
418 5
0
585
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு
உருவாகியுள்ள ‘சாய் பாதானந்தா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
சென்னையில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில், முதலில் பத்திரிகையாளர்களுக்காக
படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற பத்திரிகையாளர்
சந்திப்பில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், சத்ய ஜோதி
ஃபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த செந்தில் தியாகராஜன் உள்ளிட்ட சிறப்பு
விருந்தினர்களும், படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
‘சாய் பாதானந்தா’ திரைப்படம் ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் வாழ்க்கைச்
சரிதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. 1906-ம் ஆண்டு திருச்சி
அருகே உள்ள பொய்யாமணியில் பிறந்த ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி, தெய்வத்தைத்
தேடி அலைந்து, இறுதியில் தன்னுடைய வாழ்க்கையையே ஆன்மிகப் பணிக்கும்
மனித சேவைக்கும் அர்ப்பணித்தவர். ‘பொய்யாமணி செல்வர்’ எனப் போற்றப்பட்ட
அவர், ஷீரடி சாய் பாபாவின் மீது கொண்ட பக்தியுடன் அவரது வழியில் ஆன்மிகப்
பயணத்தை மேற்கொண்டார்..பெங்களூரு சாய் ஸ்பிரிச்சுவல் சென்டரின் Founder – Patron ஆகவும், மதராஸ் அகில
இந்திய சாய் சமாஜத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றிய ஸ்ரீ
ராதாகிருஷ்ண சுவாமிஜி, நிபந்தனையற்ற அன்பைப் போதித்ததோடு, அதைத் தனது
வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வாழ்ந்தவர். 1980-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி
பெங்களூருவில் மகா சமாதி அடைந்தார்.
ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜியின் ஆன்மிகப் பயணத்தில் நடைபெற்ற முக்கிய
நிகழ்வுகளை உள்ளடக்கிய ஆவணப் படைப்பாக ‘சாய் பாதானந்தா’ உருவாகியுள்ளது.
ஒரு சிறந்த சாய் பக்தரின் வாழ்க்கை வரலாற்றையும், ஒரு மகானின் எளிமையான
வாழ்க்கையையும் உலகுக்கு அறிமுகப்படுத்தி, அதை வரலாற்றுப் பதிவாக மாற்ற
வேண்டும் என்ற ஆன்மிக நோக்கத்துடன் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
வியாபார நோக்கம் எதுவும் இல்லாமல், ஸ்ரீ ராதாகிருஷ்ண சுவாமிஜி டிரஸ்ட் சார்பில்
இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வில்
 
முன்னாள் சர்வதேச கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பேசியதாவது:
 
“முதலில் மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். குறிப்பாக
கிருஷ்ணகுமார் சார் பற்றி சொல்ல வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக அவரை
எனக்குத் தெரியும். அவரை நான் ஒரு குருவைப் போலத்தான் பார்க்கிறேன். அவரது
தொழில் சார்ந்த விஷயங்களில் நானும் ஓரளவு தொடர்பில் இருப்பதால், அவர் எனக்கு
பல நல்ல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். தனது குருவைப் பற்றி ஒரு
பயோபிக் திரைப்படம் எடுப்பது சாதாரணமான விஷயம் அல்ல. பயோபிக் என்றாலே
பல தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள். ஆனால் உண்மையான வாழ்க்கையை
மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சி என்பதால் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப்
படத்தை உருவாக்கியதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
 
கிருஷ்ணகுமார் சார் இந்தப் படத்தை உருவாக்குவதற்காக இரண்டு ஆண்டுகளாக
முயற்சி செய்திருக்கிறார். அவர் ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று முடிவு
செய்துவிட்டால், அதை எப்படியாவது செய்து முடிப்பது அவரது திறமை. அவரை நான்
எனது குருவாகவே பார்க்கிறேன். அவரது தொழில் மற்றும் வாழ்க்கை சார்ந்து அவர்
எனக்கு பல ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அதேபோல் இந்தப் படத்தில்
நடித்துள்ள அனைத்து நடிகர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்
கொள்கிறேன். அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
 
கிருஷ்ணகுமார் சாரும் நானும் திருச்சியுடன் தொடர்புடையவர்கள். அவருடைய
குடும்பத்துக்கும் எனது குடும்பத்துக்கும் அந்த ஊருடன் தொடர்பு இருக்கிறது. அவர்
கட்டியிருக்கும் கோயிலைப் பற்றி எனக்கு முன்பே தெரியாது. ஒரு முறை அவரை நான்
தொலைபேசியில் தொடர்புகொண்டபோது, அவர் கும்பாபிஷேக நிகழ்ச்சியில்

இருந்தபோதும் தொலைபேசியை எடுத்துப் பேசினார். அந்த அளவுக்கு தனது குருவின்
மீது பக்தியுடன் இருப்பவர். அந்தக் கோயிலையும், தனது குருவின் வாழ்க்கையையும்
உலக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் படத்தை
உருவாக்கியிருக்கிறார்.
 
இதை வெறும் ஒரு சாதனையாக மட்டும் நான் பார்க்கவில்லை. தனக்காக எதையும்
செய்யாமல், தனது குருவுக்காக அவரது வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் கொண்டு
செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் இந்த முயற்சியை
மேற்கொண்டிருக்கிறார். மக்கள் அவரது குருவின் வாழ்க்கையை அறிந்து, அதிலிருந்து
நல்ல விஷயங்களை எடுத்துக்கொண்டு நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதுதான்
அவரது எண்ணம். இப்படிப்பட்ட ஒரு முயற்சியை மேற்கொண்ட கிருஷ்ணகுமார்
சாருக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.”இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ !

39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !

விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!

admin

admin

Related Posts

புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ !
News

புதிய சிந்தனைகளுடன் உருவாகிறது ‘மந்திரா ஸ்டுடியோஸ்’ !

by admin
October 5, 2026
39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !
News

39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !

by admin
October 5, 2026
விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!
News

விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!

by admin
October 5, 2026
பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று  மாலை  இறுதிச்சடங்கு !!
News

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று மாலை இறுதிச்சடங்கு !!

by admin
October 4, 2026
‘மரகத நாணயம் 2’  படப்பிடிப்பு நிறைவு!
News

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு!

by admin
October 3, 2026

Recent News

39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !

39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ !

October 5, 2026
விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!

விஜய் பாணியில் சிவகார்த்திகேயன் அதிரடி!

October 5, 2026
பயோபிக் என்றாலே  தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!

பயோபிக் என்றாலே தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!

October 4, 2026
பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று  மாலை  இறுதிச்சடங்கு !!

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று மாலை இறுதிச்சடங்கு !!

October 4, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?