Monday, October 5, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று மாலை இறுதிச்சடங்கு !!

admin by admin
October 4, 2026
in News
419 4
0
586
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழில் கமல்ஹாசன் நடித்த ராஜபார்வை அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காம ராஜன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் (வயது 94) நேற்று வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கால மானார் அவரது உடலுக்கு திரையுலகினர் பலரும் திரண்டு அஞ்சலி செலுத்தினர் இவரது இறுதிச்சடங்கு இன்று மாலை சென்னை நெசப்பாக்கம் சுடுகாட்டில் நடக்கிறது..

இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், கதாசிரியர் என பன்முக வித்தகராக திகழ்ந்த சிங்கீதம் சீனிவாசராவ் தமிழில் ‘ராஜபார்வை,அபூர்வ சகோதரர்கள்’. ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘மகளிர் மட்டும்’. ‘சின்ன வாத்தியார்’, ‘காதலா காதலா’, ‘லிட்டில் ஜான்’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கில் முதல் டைம் டிராவல் திரைப்படமான ‘ஆதித்யா 369’, ‘மயூரி’ உள்ளிட்ட பல முக்கிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் , கடந்த 1931ம் ஆண்டு செப்டம்பர் 21ம் நாள் ஆந்திரபிரதேச மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள உதயகிரியில் பிறந்த சிங்கீதம் சீனிவாசராவ் சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பட்டம் பெற்றார். 1950களில் புகழ்பெற்ற இயக்குனர் கே.வி. ரெட்டியிடம் ‘மாயாபஜார்’ (1957) போன்ற திரைப்படங்களில் இணை இயக்குனராக பணியாற்றினார்..1972-இல் வெளியான ‘நீதி நிஜாயிதி’ தெலுங்குத் திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானாா்.தமிழில் 1974-இல் வெளியான ‘திக்கற்ற பாா்வதி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானாா். அந்தப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. .சிங்கீதம் சீனிவாசராவ் இயக்குனர் மட்டுமல்லாமல் திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் நடிகராகவும் சினிமாவில் முத்திரை பதித்துள்ளார். திரைத்துறையில் புதுமைகளை புகுத்தியதற்காக ‘திக்கற்ற பார்வதி’ மற்றும் ‘புஷ்பக விமானா’ ஆகிய படங்களுக்கு 2 தேசிய விருதுகளை பெற்றுள்ளார்..

You might also like

பயோபிக் என்றாலே தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு!

திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பெண்கள் அனுபவிக்கும் வலி! கீர்த்தி சுரேஷ் பரபரப்பு பேச்சு!!

மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளிலும் படங்கள் இயக் கியுள்ளார்.தமிழில் 1974-இல் வெளியான ‘திக்கற்ற பாா்வதி’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானாா். அந்தப் படத்துக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. சமீபத்தில் 90 வயதைக் கடந்த நிலையிலும் சிங்கீதம் சீனிவாச ராவ் ‘சிங் கீதம்’ என்ற படத்தை இயக்கினார் இப்படம் பான் இந்திய படைப்பாக வெளியானது.தேசிய விருது, நந்தி விருது, ஃபிலிம்பேர் விருது மற்றும் கர்நாடக மாநில விருதுகள் பலவற்றை வென்றுள்ள சிங்கீதம் சீனிவாச ராவுக்கு இந்தியத் திரைப்படக் கூட்டமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கி கவுரவித்தது.

இதுமட்டுமல்லாமல், கிராபிக்ஸ், அனிமேஷன் போன்றவை தென்னிந்திய சினிமாவுக்குப் பெரியளவில் பரிச்சயமில்லாத சமயத்திலேயே, அப்படியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வெற்றிப் படங்களை கொடுத்தார். இந்தியாவின் முதல் டைம் டிராவல் படமான ‘ஆதித்யா 369’ படத்தை இயக்கியவரும் இவர்தான்.என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த சிங்கீதம் சீனிவாசராவ் ,வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட் து வந்தது இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார் . அவரின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள சினிமா ரசிகர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர், அவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணியளவில் சென்னை கேகே நகரை அடுத்த நெசப்பாக்கம் சுடு காட்டில் நடக்கிறது.

admin

admin

Related Posts

பயோபிக் என்றாலே  தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!
News

பயோபிக் என்றாலே தயாரிப்பாளர்கள் தயங்குவார்கள்.! முத்தையா முரளிதரன் பரபரப்பு பேச்சு!!

by admin
October 4, 2026
‘மரகத நாணயம் 2’  படப்பிடிப்பு நிறைவு!
News

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு!

by admin
October 3, 2026
திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பெண்கள் அனுபவிக்கும் வலி! கீர்த்தி சுரேஷ் பரபரப்பு பேச்சு!!
News

திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பெண்கள் அனுபவிக்கும் வலி! கீர்த்தி சுரேஷ் பரபரப்பு பேச்சு!!

by admin
October 3, 2026
நடுக்கடலில்  ‘துரோகம் பழகு’ படக்குழுவின் வித்தியாசமான முயற்சி!
News

நடுக்கடலில் ‘துரோகம் பழகு’ படக்குழுவின் வித்தியாசமான முயற்சி!

by admin
October 3, 2026
இயக்கமா…நடிப்பா? இயக்குநர் ஜேசன் சஞ்சய் அதிரடிமுடிவு!
News

இயக்கமா…நடிப்பா? இயக்குநர் ஜேசன் சஞ்சய் அதிரடிமுடிவு!

by admin
October 2, 2026

Recent News

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று  மாலை  இறுதிச்சடங்கு !!

பழம்பெரும் இயக்குனர் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானார் ! இன்று மாலை இறுதிச்சடங்கு !!

October 4, 2026
‘மரகத நாணயம் 2’  படப்பிடிப்பு நிறைவு!

‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு நிறைவு!

October 3, 2026
திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பெண்கள் அனுபவிக்கும் வலி! கீர்த்தி சுரேஷ் பரபரப்பு பேச்சு!!

திருமண வாழ்க்கைக்குள் நுழையும் பெண்கள் அனுபவிக்கும் வலி! கீர்த்தி சுரேஷ் பரபரப்பு பேச்சு!!

October 3, 2026
நடுக்கடலில்  ‘துரோகம் பழகு’ படக்குழுவின் வித்தியாசமான முயற்சி!

நடுக்கடலில் ‘துரோகம் பழகு’ படக்குழுவின் வித்தியாசமான முயற்சி!

October 3, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?