
கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம் ;நந்தன் சுப்பராயன், ஒளிப்பதிவு :பரமேஷ்வர், இசை:ஜூபின்,ஜெரார்ட்
வேல.ராமமூர்த்தி,அஞ்சன், ஆனந்தசாமி,அஸ்மிதா மற்றும் கூத்துப்பட்டறை நடிகர்கள்.
************
நந்தன் சுப்பராயன் இயக்குநர் பாலாவின் பட்டறையைச் சேர்ந்தவர் .நான்கு படங்கள் அவருடன் ஒர்க் பண்ணியவர் என்கிறார்கள்.சிதம்பரத்தை சேர்ந்தவர்.நந்தன் என்கிற அடைமொழி கூட ‘திரு நாளைப் போவார்’எதிரொலியாக இருக்கலாம். இந்தப்படம் இந்த நந்தனுக்கு வேள்வித் தீ தான்!
கனவுகளுடன் கல்லூரிக்கு செல்லும் ஜான் என்கிற ஜானகிராமன் .நீதிக்காகப் போராடும் சேகுவரா என்கிற சக தோழர்.இவர்கள் எப்படி போதைப் பொருள் கடத்தும் கும்பலிடம் சிக்கினார்கள்.அதிலிருந்து மீண்டவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் கதை.
காதல் உண்டு.ஆனால் காதலர்களை ஒன்று சேர்க்கிற அவசியம் இல்லாமல் போகிறது .அது ஏன் என்பதை நடைமுறைக்கு ஏற்ப ,அதுதான் சாத்தியம் என்பதை சொல்லியிருக்கிறார். இந்த இடத்தில் சற்று அழுத்தம் கொடுக்கத் தவறி விட்டார் பாலாவின் சீடர்.
பரிசோதனைக் கூடத்தில் லாப் ரிப்போர்ட் மாறிப்போவது இதெல்லாம் பழைய கதை.
சேகுவாக வருகிற அஞ்சன், ஜானாக வாழ்ந்த ஆனந்தசாமி இருவருமே கேரக்டரை நிறைவு செய்திருக்கிறார்கள்.
ஜிப்பா,வேட்டி வழக்கம்போல மீசையை முறுக்கி விரட்டுவது வேல.ராமமூர்த்தியின் அடையாளமாகிவிட்டது. இந்த கருவக்காட்டு மனிதரை இப்படியே படத்துக்குப்படம் காட்டுவது சலிச்சுப் போச்சு.! உடம்பு காட்டுவது இது எத்தனாவது படம்னு தெரியல.
முதல் பாதியை விட இரண்டாம் பாதிக்குத்தான் மார்க்.
வேகம் இருக்கு.!
போடுங்க 2 / 5












