நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஆக பணியாற்றி வருகிறார். சம்மூக வலைதளங்களிலும் ஆர்வம் காட்டி வரும் திவ்யா, தனது துணிச்சலான கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.விரைவில் அரசியலுக்கு வரப்போவதாகவும் அறிவித்துள்ள அவர் வரும் எம்பி தேர்தலிலும் நிற்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில்,பெரியாரிஸம் மீதும் பெரும் ஈர்ப்பு கொண்ட திவ்யாசத்யராஜ், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பெரியார் சிலை புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு பதிவிட்டுள்ளதாவது, .
புதிதாக திருமணமான என்னுடைய தோழி ஒருவர், அவருடைய மாமியார் தினமும் பொட்டு (பிந்தி) அணிய வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும், கூறிக்கொண்டே இருக்கிறார். ஒரு பெண் நெற்றியில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய கூட வேறு ஒருவருக்கு தான் உரிமை இருக்கிறது என்பது எனக்கு இன்னும் ஆச்சரியமாக உள்ளது..” “நான் இன்ஸ்டா பக்கம் தொடங்கிய போது பலரும் எனக்கு அட்வைஸ் செய்தார்கள், ஷார்ட் உடை அணிந்து போட்டோ போடாதீர்கள் என சொன்னார்கள்.அரசியலுக்கு வர ஆர்வம் உள்ள பெண்கள் காட்டன் சேலையில் தான் இருக்க வேண்டும், உடலை காட்டும் உடைகளில் அல்ல என்றும் சொன்னார்கள்.ஒரு பெரியாரிஸ்ட்டாக, ஒவ்வொரு பெண்ணும் தான் விரும்பியதைச் செய்ய, விரும்பியதை அணிந்து, விரும்பியபடி வாழ உரிமை இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். பெரியார் நூலகத்தில் நான் மிகவும் அமைதியான மற்றும் பயனுள்ள மாலைப் பொழுதைக் கழித்தேன். பெரியார் அருங்காட்சியகத்தில் அப்பாவின்(சத்யராஜ்) பெயர் கொண்ட ஆடிட்டோரியத்தைப் பார்க்கும்போது எனக்கு மிகுந்த உற்சாகம் ஏற்படுகிறது இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்
View this post on Instagram
இது குறித்து திவ்யாசத்யராஜிடம் கேட்டபோது, “நான் ஒரு பேஸ்கட்பால் பிளேயர் அந்த வகையில் நான் எனது இன்ஸ்டராகிராம் பக்கத்தில்எனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருந்தேன் அந்த புகைப்படத்தை பார்த்து எனக்கு பலரும் கடும் எதிர்ப்புகளை பதிவிட்டனர். அதாவது அரசியலுக்கு வரப்போற பொண்ணு இந்தமாதிரி ட்ரஸ் பண்ணக்கூடாதுன்னு. நான் பேஸ்கட் பால் விளையாடும் போது அதற்குரிய வசதியான உடைகளைத்தான் அணிய முடியும்.சேலைகட்டிக்கொண்டு பேஸ்கட்பால் ஆடமுடியாது. நான் அரசியலுக்கு வருவது உறுதி தமிழ்நாட்டு மக்களுக்காக அவர்களின் சந்தோஷத்துக்காக ஒரு அரசியல் வாதியாகவும் நான் உழைக்க தயாராக இருக்கிறேன்.அதேசமயம் அஸ் ஏ பெரியாரிஸ்ட் ஒரு பெண் எப்படி உடை அணிய வேண்டும் யாரும் கருத்து சொல்லக்கூடாது என்பது தான் என்னோட கருத்து.அரசியலுக்கு வருவதற்கும் உடைக்கும் என்ன சம்பந்தம் நான் ஒரு கூடைப்பந்து வீராங்கனை அந்த விளையாட்டின் போது அந்த மாதிரி உடையை தான் நான் அணிய வேண்டும்.அது தான் முறை நான் எப்படி உடை அணிய வேண்டும் என யாரும் எனக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது. நான் அரசியலில் நுழைந்து எம்பி தேர்தலில் போட்டியிட போவதும் உறுதி.அதற்காக நான் என்னை தயார்படுத்தி வருகிறேன் அதற்காண களப்பணிகளும் செய்து வருகிறேன்”.என்கிறார்.













