சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்துஅப்படத்தின் நாயகி துஷாரா விஜயன், தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாசுடன் இணைந்து அநீதி என்ற படத்திலும்,மீண்டும் பா ரஞ்சித் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராமுடன் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தனது திரையுலக பயணம் குறித்து துஷார விஜயன் கூறுகையில்,” சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து எனது திறமைக்கு சவால் தரும் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் கதைகளை தேர்ந்தெடுத்து வருகிறேன்.,சினிமாவை பொருத்தவரை வெற்றி தோல்வி இரண்டையும் நம்பாமல் நமது திறமையை மட்டுமே நம்பி தொடர்ந்து உழைக்க வேண்டும்.
என்னுடைய கதை தேர்வு எனக்கு மிகவும் முக்கியமானது.எனக்கு அந்த கதை மற்றும் கதாபாத்திரம் பிடித்திருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன்..படங்களின் எண்ணிக்கையை கூட் டுவது எனக்கு முக்கியமல்ல.என்படம் பேசப்படும் பட்டியலில் இருக்கிறதா என்று மட்டுமே பார்க்கிறேன்.சினிமாவில் நான் காட்டும் பொறுமையே என்னை இந்த இடத்திற்கு கொண்டுவந்துள்ளது. திறமையும் பொறுமையும் இருந்தால் சினிமாவில் சிறப்பான அங்கீகாரத்தை பெறலாம் எனக்கு சினிமா எல்லாமுமாக உள்ளது என கூறியுள்ளார்