
தின்று கொழுத்த திருவோடு சந்நியாசி ,கட்டையை சாத்துகிற இடம் பெருமாள் கோவில் மண்டபமாக இருக்கும்.
இதைப்போல வாய்ப்பிழந்த நடிகைகள் கரை ஒதுங்குகிற இடம் ‘இன்ஸ்ட்ராகிராமாக ‘இருக்கிறது.
கணவரை ரத்துப் பண்ணி விட்டு வந்த சமந்தாவுக்கு தொடக்கத்தில் பசுமைதான்.!ஆனால் போகப்போக இன்ஸ்ட்ராதான் பாலைவன பசுஞ்சோலையாகி இருக்கிறது.
இப்போது சற்றே ஆறுதல்.! காபி வித் கரண்ஜோகரின் வெளிச்சம் பட்டிருக்கிறது.
அக்ஷய் குமாருடன் ‘டாக் ஷோ ‘.
அந்த படத்தை கவர்ச்சியுடன் வெளியிட்டிருக்கிறார்.
அது சரி ,எந்த பாலிவுட் நடிகருடன் பலே டான்ஸ் ஆடவிருப்பம் என்கிற கேள்விக்கு “ரன்வீர் சிங் ,ரன்வீர் சிங் “என இரண்டு தடவை அழுத்தம் கொடுத்து சொல்லியிருக்கிறார்.
தம்பிக்கு கல்யாணம் ஆகிடுச்சே !












