
தணிக்கைக்குழு பிஸ்கட் ,மிக்ஸர் தின்னுக்கிட்டு பார்த்த படம் போலிருக்கு.!அரசியல் கட் சிகளை சார்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ள வரை சென்சார் உருப்படப்போவதில்லை என்பதற்கு இந்த படமும் ஒரு எடுத்துக்காட்டு !!!
பாலியல் கொடுமை தொடர்பாக எத்தனையோ படங்களை பார்த்திருக்கிறோம் ,ஷூ மாதிரியான வன்கொடுமை திணிக்கப்பட்ட படத்தை பார்த்ததில்லை. சின்னப்பெண் குழந்தைகளை லாரியில் கடத்தி பிராத்தல் தொழில் செய்கிறார்களாம் . எல்லாமே வறுமையின் பிடிக்குள் வதங்கிப்போன சிறுமிகள்.பிரிய கல்யாண்,
இந்த தொழிலை டான் ஒருத்தன் செய்றான்.அதுக்கு ஒருத்தி துணையாகவும் இருக்கிறாள். குடிகார அப்பனான அந்தோணிதாசன் தன்னுடைய ஒரே மகளை அந்த பிராத்தல் கும்பலுக்கு விற்கிறார் என்பது இந்த படத்தில் வக்கிரத்தின் உச்சம். இப்படியெல்லாம் காட்டினால் மக்கள் உருகி விடுவார்களா?குறிப்பா இந்த படம் காவல்துறைக்கு மிகப் பெரிய களங்கம்.
அப்படியென்ன கதை ?
ஷூவில் ஒன்றை தரையில் உதைத்தால் பத்து நிமிடம் பின்னால் போகலாம். மற்ற ஷூவை தரையில் மிதித்தால் பத்து நாள் பின்னால் போகலாம் என்கிற மாதிரியான ஷூவை கண்டுபிடிக்கிறார் திலீபன். காணாமல் போகும் அந்த ஷூ யோகிபாபுவுக்கு கிடைத்தால் என்ன ஆகும்.?
ஒரு வெங்காயமும் ஆகாது.! பொதுவாக இவர்கள் பேசி நடித்தாலே சிரிப்பு வரும் என்கிற நம்பிக்கையை யோகி பாபு,ரெடின் கிங்ஸ்லி ,விஜய் டி .வி .பம்பை தலை பாலா ஆகியோர் கெடுத்து விட்டார்கள் .
சிறுமி பிரியா கல்யாண் முக்கிய வேடத்தில்.!இந்த பெண்ணிடம் திறமை இருக்கிறது . இவர் ஏற்றுள்ள கேரக்டருக்கு நியாயம் சொல்லியிருக்கிறார். ஆறுதல்.!
ஜாக்பாட் போன்ற நகைச்சுவைப் படங்களை இயக்கிய கல்யாண் இப்படியொரு கதையை தேர்வு செய்திருக்கலாமா?
காட்சிகள் எல்லாமே உருக்கம் தேடி வலிந்து திணிக்கப்பட்டதாகவே தெரிகிறது.இயல்பு இல்லை.
படம் பார்க்க விரும்புகிறவர்களை தடுப்பதற்கு எவர்க்கும் உரிமை இல்ல.
மார்க்கு : 1.5 /5












