நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக கோடம்பாக்கம் முழுவதும் தகவல் பரவிவருகிறது.இவர்கள் இருவரும் தெலுங்கில் மகாசமுத்திரம் படத்தில் இணைந்து நடித்தனர் அப்போது ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்தது என்கிறார்கள்.
இது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் மழுப்பலாகவே பதிலளித்து வந்தார். இந்நிலையில் சித்தார்த் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள டக்கர் பட ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் சித்தார்த்திடம்,அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் யாருடன் பாடிக்கொண்டே இருக்க ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார்..
அதற்கு பதிலளித்த சித்தார்த் என்னுடைய ஊரில் உள்ள அதிதி தேவ பவா உடன் என்று கூறினார்.இதன் மூலம் அதிதி ராவை சித்தார்த் காதலிப்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தி யுள்ளதாக அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.













