90 களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் சுகன்யா.கமல்ஹாசன், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ் உட்பட பல கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
இதனிடையே கடந்த 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரீதர ராஜகோபால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். திருமணத்திற்கு பின் சுகன்யா ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார் தற்போது புதிதாக பாடலாசிரியர் அவதாரம் எடுத்துள்ளார்.
மலையாள படம் ஒன்றில் இடம்பெறும் தமிழ் பாடல் ஒன்றை சுகன்யா தான் எழுத வேண்டும் என அப்படத்தின் இயக்குனர் சுரேஷ் பாபு, இசையமைப்பாளர் சரத் ஆகியோர் விடுத்த கோரிக்கை யை ஏற்று விடுத்ததை அடுத்து அவர் இந்த பாடலை எழுதியுள்ளார் என்கிறார்கள். .













