தமிழில் சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் கதாநாயகயாக அறிமுகமான நயன்தாரா,தென்னிந்திய திரையுலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த “சந்திரமுகி” படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, அவர் தொடந்து நடித்த அனைத்துப் படங்களும் ப்ளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன. ரஜினிகாந்த், விஜய், அஜித், தெலுங்கில் சிரஞ்சீவி, பவன் கல்யாண் என சூப்பர்ஸ்டார் நடிகர்களின் முதல் சாய்ஸாக மாறினார் நயன்தாரா. முன்னணி டாப் நடிகர்கள் அனைவருடனுடன் இணைந்து ப்ளாக்பஸ்டர் படம் தந்த பெருமை கொண்ட நயன்தாரா, தென்னிந்திய சினிமாவிமன் நம்பர் 1 நடிகையாக புகழப்பட்டார்.
தமிழின் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா,தனது திருமணத்திற்கு பிறகும் பிஸியான நடிகையாகவே உள்ளார்.தற்போது பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.
இந்நிலையில் ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கும் விதமாக, பிரபல சமூல வலைதளமான ‘டுவிட்டர்’ தளத்தில் இணைந்தார் அதில் தனது புகைப்படங்கள் தனது மகன்கள் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இணைந்திருக்கிறார். நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய நொடியில், உலகம் முழுவதிலிருந்து, ரசிகர்கள் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்து அவரது சமூக வலைத்தள பக்கத்தை ஃபாலோ செய்து வருகின்றனர் முதலாவதாக தனது மகன்களின் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.













