கடற்கரையில் காற்று வாங்கி விட்டு அப்படியே வீட்டுக்கு சென்று முகம் கழுவுவதற்குப் பதிலாக கடலில் முகம் கழுவிய கதையாகி விட்டது அந்த தொகுப்பாளினியின் முகம்!
அனுஷ்காவை சற்றே உரசிப் பார்த்திருக்கிறார்கள் கேரளத்து ஊடகத்து சகோதரர்கள்.அனுஷ்காவும் அமைதியாக பதில் சொல்லி இருக்கிறார். .சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பது போல தொடக்கத்தில் சாதாரணமாகவே இருந்திருக்கிறது உரையாடல்.
“பெண்களுக்கு முக்கியத்துவம் இருப்பது மாதிரியான கதைகளையே தேர்வு செய்கிறீர்களா ?”
“அந்த மாதிரியான கேரக்டர்களை நான் தேர்வு செய்வதில்லைங்க. அதுவாகவே கதையில் அமைந்து விடுகிறது.பெண்களை மையமாக வைத்துப் படம் எடுக்கவேண்டும் என்கிற உணர்வு ‘அருந்ததி’படத்துக்குப் பிறகுதான் பரவலாகி இருக்கிறது.”
“தென்னிந்திய திரை உலக ரசிகர்கள் உங்களுக்கு ‘சூப்பர் ஸ்டார் ‘ அந்தஸ்து கொடுத்திருக்கிறார்கள்.மகிழ்ச்சிதானே?”
“அவர்களுக்கு மனமார்ந்த நன்றி! ஆனால் ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற வளையத்துக்குள் நுழைய விரும்பவில்லை. என்னை விட நாற்பது வருடங்கள் இந்த இண்டஸ்ட்ரியில் சிறந்து வாழ்ந்தவர்கள் இருக்கிறார்கள். நான் வந்து 12 வருஷம்தான் ஆகிறது. சிறந்தவர்களை விட்டுவிட்டு என்னை உயரத்தில் தூக்கி வைப்பது பெருமையாக இல்லை.”
“உங்களை டி.வி.நிகழ்ச்சியில் ஒரு தொகுப்பாளினி சூர்யாவுடன் உயர ஒப்பீடு செய்தது பற்றி?”
“மிக மிக மட்டமான ரசனை!அது என்ன ‘டேஸ்ட்டோ?’ நடிக நடிகைகள் பொதுவானவர்கள் என்பதால் இழிவாக பேசி விடுவதா? எல்லை தாண்டிய செயல்” என்றார் காட்டமுடன்!
சரிதான்!