கண்ணைக் கொடுப்பதற்காக கடவுளின் மீது கால் வைத்தவர் கண்ணப்ப நாயனார் என்கிறபோது ஸ்ரீ ரெட்டிக்கு ஜெயலலிதா ரோல் மாடலாக இருக்கக் கூடாதா?
“உயிருக்கு உத்திரவாதம் இல்லிங்க ஆந்திராவில்.! சிரஞ்சீவி ,பவன் கல்யாண், சுரேஷ்பாபு குடும்பத்தினரின் ஆதிக்கத்தில்தான் தெலுங்கு இண்டஸ்ட்ரி இருக்கு. என் உயிருக்கு உத்திரவாதம் இல்ல. அதனாலதான் சென்னைக்கு குடி வந்திருக்கேன்”என்கிற ஸ்ரீ ரெட்டியை வைத்து படம் தயாரிக்கிற பாக்கியமும் சென்னைக்கு கிட்டியிருக்கிறது.
“. இப்ப ஸ்ரீ ரெட்டி டைரி பெயரில் படம் எடுக்கப்போறாங்க. நான்தான் முக்கிய கேரக்டர். வாய்ப்பு வேணும்னா பெட்ரூம்ல கம்பெனி கொடுன்னு கேட்டவங்களை பற்றிய விவரம்படத்தில் இருக்கு. வீடியோ காட்சிகளும் இருக்கு. எனக்கு ஜெயலலிதாதான் ரோல் மாடல்.நான் அரசியலுக்கு வருகிற வாய்ப்பும் இருக்கு” என்கிறார் ஸ்ரீ ரெட்டி.
புண்ணியம் செய்த நகரம் சென்னை மாநகரம்.