
லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படத்திற்கு பெயர் ” பெட்டிக்கடை “
இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியார் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார்
கதா நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர்,அஸ்மிதா நடிக்கிறார்கள்.கதகதப்புக்கு!
கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி தயாரிக்கிறார் இசக்கி கார்வண்ணன்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது…
விழாவில் பாரதிராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சமுத்திரகனி, வீரா இயக்குனர் இசக்கி கார்வண்ணன், இசையமைப்பாளர் மரியா மனோகர், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாடலாசிரியர் மடத்தமிழ் வேந்தன் ஆகியோரும் பங்கு பெற்றனர்.
சமுத்திரகனி பேசியதாவது..
“இது ஒரு நல்ல தருணம்..நாம் கடந்து வந்த விஷயம். நாம் வேணாம்னு விட்டுட்டு வந்த விஷயத்தை இதில் எடுத்து இருக்காங்க. அடுத்த தலைமுறையை எப்படி பாதிக்கும்…அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன விட்டுட்டு போறோம்னு இதில் சொல்லி இருக்கார். இந்த டைரக்டர் இசக்கி கார்வண்ணனைப் பற்றி சொல்லனும்னா இளம் கன்று பயமறியாதுன்னு சொல்வோமே..அது மாதிரி தான். திடீரென்று ஒரு நாள் வந்து சர்க்கார் படத்து ரிலீஸ் தேதிக்கே நம்ம படத்தையும் ரிலீஸ் செய்வோம்ன்னார்..நான் தான் அப்படியெல்லாம் வேணாம்..நமக்குன்னு ஒரு தேதி வரும் ..அப்ப ரிலீஸ் செய்வோம் என்று அனுப்பி வைத்தேன்…அந்தளவுக்கு அவருக்கு படத்து மேலே அவ்வளவு நம்பிக்கை அவருக்கு “என்றார் சமுத்திரகனி.
விழாவில் பேசிய பாரதிராஜா… “பெட்டிக்கடை என்பது நம் பண்பாட்டின் அடையாளம். நமது ஊர்களில் கடைகளை பெட்டிக்கடை என்று தான் அழைப்பார்கள். பழமையைப் பேசினால் எங்கு நாம் பின்னோக்கிப் போகிறோமோ என்று தோன்றும். ஆனால் அப்படியல்ல. நம் பண்பாட்டை நாம் பேண வேண்டும்; பேச வேண்டும். அப்படியான பண்பாட்டுக்கு நாம் போராடினால் நம்மை சமுக விரோதி என்கிறார்கள். இன்று சமூகத்திற்காக போராடினால் சமூகவிரோதிஇந்த படத்தின் பாடல்களை பார்க்கும் போது என்னை நானே கண்ணாடியில் பார்த்துக் கொண்டது மாதிரி இருக்கு.மண்வாசனையை நாம் என்றும் விட்டுக் கொடுக்கக் கூடாது.
ஏதாவது நல்ல விஷயத்துக்காக பேசினாலே சமூக விரோதியாக்கப் பட்டு விடுகிறார்கள்.
இந்த இயக்குனர் பெட்டிக்கடை- No GST என்று வைத்திருக்கிறார்…இவருக்கும் பிரச்சனை வரலாம் போராடிதான் ஆக வேண்டும் இல்லை என்றால் நாம் நம் பாரம்பர்யத்தை இழந்து விடுவோம், தமிழை இழந்து விடுவோம், நம் மண்ணை இழந்து விடுவோம் ! ஏன் இந்த பூமியையே இழந்து விடுவோம். இந்த படம் இசக்கி கார்வண்ணன் சமுத்திரகனி வீரா மரியா மனோகர் மடத்தமிழ் வேந்தன் என எல்லோருக்குமே நல்ல வாழ்க்கையை ஏற்படுத்தித்தரும் ..
இவ்வாறு பாரதிராஜா பேசி இசையை வெளியிட்டார். இங்கு வெளியாகி இருக்கிற படங்கள் நமது பண்பாட்டை காட்டுவதாக நினைக்கிறீர்களா?












