
“அவனை அழைத்து வந்து
ஆசையில் மிதக்கவிட்டு
ஆடடா ஆடு என்று
ஆடவைத்துப் பார்த்திருப்பேன்”
-என இறைவனுக்கே தண்டனை கொடுக்கத் துணிந்தவன் கவிஞன் .
காதலை உயர்வாக மட்டுமல்ல உயிராகவே நினைத்தவன்.
ஆனால் பெண்களை அரசியல்வாதிகள் மதிக்கிறார்களா? இல்லை மிதிக்கிறார்கள்.!
ஜெய பிரதா .சீனியர் நடிகை.பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர். வயது 56 மூதாட்டி.
சமாஜ் வாடி கட்சியில் முக்கிய புள்ளியாக இருந்தவர்.இவர் மீதும் அமர்சிங் மீதும் கரும்புள்ளிகள் குத்தப்பட்டதால் காயப்பட்டு கட்சியை விட்டு வெளியே வந்தார்கள்.
வந்தவர்களை ‘கள்ளக்காதலர்கள் ‘என்பதாக சொல்லி சேறு வாரி இறைத்தனர்.
அமர்சிங் நோய் வாய்ப்பட்டு டயாலிஷ்சில் இருந்த காலத்தில் இருவரது படங்களையும் ‘மார்பிங்’செய்து அசிங்கமாக அவதூறு செய்தனர்.
ரத்தக்கண்ணீர் வடிக்கிறார் ஜெயபிரதா.
“அமர்சிங் ஜி,எனக்கு காட்பாதர். அவருக்கு ராக்கி கட்டி சகோதரர் என்பதையும் எதிர்தரப்பினருக்கு உணர்த்தினேன்.
.அவருடன் எனக்குத் தொடர்பா? அடுக்குமா இது.! அபாண்டம்!
சமாஜ்வாடி கட்சியில் சீனியரான அஜம்கான் என் மீது அவதூறுச் செய்திகளை பரப்பி வருகிறார்.
என் மீது ஆசிட் வீச முயன்றார்கள். உயிருக்கு உலை வைக்கப் பார்த்தனர்.
நான் தற்கொலைக்கும் தள்ளப்பட்டேன்.
பெண்களுக்கு அரசியலில் பாதுகாப்பு இல்லை. முலாயம்சிங் ஜி கூட கூப்பிட்டு ஆறுதல் சொல்லவில்லை. என்ன தலைவர் அவர்?” என்கிறார் ஜெயபிரதா.












