
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் சென்னைக்கு திரும்பிவிட்டார்.
நள்ளிரவு 1.30 மணி அளவில் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மனைவியுடன் வந்திறங்கினார் .படு உற்சாகமுடன் காணப்பட்டார்.
அவர் நலமுடன் வீடு திரும்பியதை ஒட்டி அவரது இல்லத்தில் திருமண விழா போல வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன
விமான நிலையத்திலிருந்து அவர் திரும்பிவரும் வழியில் சாலிகிராமம் பகுதி முழுவதும் தோரணங்கள்,வாழ்த்து பிளக்ஸ்கள் ,வெடிகள் வெடித்து தொண்டர்கள் ஆரவாரமாக கொண்டாடி விட்டார்கள். ஆரத்தி எடுத்து கேப்டன் வீட்டுக்குள் அழைத்து செல்லப்படடார்.
இனி அரசியல் படு சூடு பிடிக்கும்!












