
அமீஷா படேல். இந்தி உலகில் பிரபலம்.
அண்டை மாநிலத்திலும் அம்மணியின் கொடி பறந்தது. தெலுங்கு தேசத்தின் விருப்பமாக இருந்தவர்.
திரைப்படம் தவிர்த்து தனியார் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.
மொரதாபாத் தில் உள்ள முரட்டு பணக்காரர் வீட்டு கல்யாண நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுவதற்கு ஒப்பந்தம் ஆகி இருந்தார். முன்னதாகவே 11 லட்சம் அட்வான்ஸ். ஆனாலும் கல்யாண நிகழ்ச்சிக்குப் போகவில்லை. போக்குக்காட்டிவிட்டார்.
ஆனால் பணம் கொடுத்தவர் சும்மா இருப்பாரா? கோர்ட்டுக்கு இழுத்து விட்டார். மார்ச்சில் விசாரணை முடிகிறது.












