
ஆமை ,அமீனா புகுந்த வீடு உருப்படாது என்பார்கள்.
அரசியலில் புருடா விடுவதற்கென்றே சுப்பிரமணியன் சுவாமிக்கு பிஜேபி தீனி போட்டு வளர்த்து வருகிறது. ஜெயலலிதாவுடன் எவ்வளவோ மல்லுக்கட்டிப்பார்த்தார் இந்த சாமி. அந்தம்மா தமிழ்நாட்டுப் பக்கமே அரசியல் பண்ண முடியாதபடி கடுமையான அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்து விட்டு சென்றிருக்கிறார்.
கோர்ட்டுக்கு வந்த சாமிக்கு அதிமுகவை சேர்ந்த பெண்கள் புடவையை தூக்கி…
அப்பேர்ப்பட்ட சு.சாமிதான் நைசாக வாலை நீட்டி இருக்கிறார் சூப்பர் ஸ்டார் மீது.!
“நான் சொன்னது சரியாகப் போச்சுல்ல, அவர் கட்சி ஆரம்பிக்க மாட்டார். தேர்தலில் போட்டி போட மாட்டார்.கட்சி ஆரம்பிச்சு தேர்தலில் நின்னா அவர் ஜெயிலுக்குப் போக வேண்டியது வரும்.இது எனக்கு மட்டும்தான் தெரியும் “என்கிறார் சூனா சாமி.!
பாஜவுக்கு தமிழ் நாட்டில் நோட்டா அளவுக்குத்தான் வாக்கு வங்கி. கூட்டணி மூலமா அதை உயர்த்திக் காட்டலாம்னு பார்த்தால் அண்ணன் சாமி அதுக்கும் வேட்டு வைப்பார் போலிருக்கே!












