
தொட்டிலில் தூங்கும் குழந்தையை கிள்ளிவிட்டு வேடிக்கைப் பார்க்கிற டைப் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. திரை உலகில் இவரது முதல் விரோதியாக விஷால்தான் இருப்பார். அப்படி ஒரு முட்டல், மோதல் இவர்களிடையில்.!
இந்த புண்ணியவான் இழுத்த இழுப்பில்தான் இளையவேள் ராதாரவி -நயன்தாரா மோதல் கொலையுதிர்கால மேடையில் அரங்கேறியது.
நயன்தாராவின் முந்தைய காதல் விவகாரங்களை மறக்குமளவு மீடியாக்கள் நயனுக்கு முட்டுக் கொடுத்தன.
தீக்கொளுத்தி என்றே சுரேஷ் காமாட்சியை சில தயாரிப்பாளர்கள் சொல்வார்கள். இந்த காமாட்சி எடுக்கும்படம்தான் மாநாடு. வெங்கட்பிரபு இயக்கத்தில் வளரப்போகிறது. இந்த படத்துக்காக உடல் இளைக்கும் பயிற்சிக்காக வெளிநாடு சென்றிருந்தார் சிம்பு.
அவ்வளவுதான் “படம் டிராப்டு. கதை முடிஞ்சது ” என்று காமாட்சிக்கு வேண்டாதவர்கள் கதையை கட்டி விட்டார்கள்.
“மாநாடு வெற்றிகரமாக நடக்கும். எஸ்.டி.ஆரின் நாயகியாக கல்யாணி நடிக்கிறார்.பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் மகள்” என அறிவித்திருக்கிறார் சுரேஷ்காமாட்சி.












