செக்கச்சிவந்த வானம் ,காற்றின் மொழி படங்களைத் தொடர்ந்து ஜோதிகா,அறிமுக இயக்குநர் கவுதம்ராஜ் இயக்கத்தில் ராட்சசி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இம்மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜோதிகா, கீதா ராணி என்ற ஆசிரியையாக நடிக்கிறார். பள்ளி மற்றும் கல்வித்துறைகளில் நடக்கும் அவலங்களைப் பற்றி இப்படம் பேசுகிறது.
இந்த டிரெய்லரை இதுவரை20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து பாராட்டியுள்ளனர்.
‘என்ன நீ வைக்கிறது தான் சட்டமா? இது என் ஊரு! என மிரட்டும் அரசியல்வாதியை, பதிலுக்கு, உன்னை மாதிரி என்னாலும் ரவுடியிசம் பண்ண முடியும் என்பதைப்போல, ‘சோடா’ பாட்டிலை உடைத்து, ‘இது என் ஸ்கூலு’ என மிரட்டும் காட்சியில் மீண்டும் ஒரு ‘நாச்சியாராக’ கம்பீரமாக கர்ஜிக்கிறார் ஜோதிகா.
கல்வி அரசியலைப் பேசும் இப்படத்தில் வசனங்கள் எல்லாம் அரசியல் சரவெடியாக இருக்கும் என்கிறது படக்குழு!.