கடந்த 2012ல் கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் சத்யசிவா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘கழுகு’.
ஏழு வருடங்களுக்கு பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக இதே கூட்டணியில் ‘கழுகு 2’ படம் உருவாகிஇருக்கிறது.
மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள இந்தப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது. வரும் ஆகஸ்ட்-1ஆம் தேதி இந்த படம் ரிலீஸ்.
இதையடுத்து இந்த படத்தின் வியாபாரம் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த திரைப்படம் விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது..
த்ரில் நிறைந்த இந்த திரைப்படத்தை ரசித்துப் பார்த்த விநியோகஸ்தர்கள், யாருமே எதிர்பாராத விதமாக அமைக்கப்பட்டுள்ள கிளைமாக்ஸை பார்த்து கண்கலங்கினார்களாம்… இதில் உணர்ச்சிவசப்பட்ட கோவை விநியோகஸ்தர் சிதம்பரம், கோவை ஏரியா வெளியீட்டு உரிமையை அவுட் ரேட் முறையில் வாங்கிவிட்டார்.
கழுகு படத்தில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தற்கொலை செய்து கொள்பவர்களில் பிணங்களை உயிரைப் பணயம் வைத்து மீட்டெடுக்கும் தொழிலாளி கதாபாத்திரத்தில் நடித்த கிருஷ்ணா, கழுகு 2 படத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் ஆபத்தான மிருகமான செந்நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தில் காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோபிகிருஷ்ணா படத்தொகுப்பை கவனித்திருக்கிறார்.
—