2019ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றுதான் சிவகார்த்திகேயனின் “ஹீரோ”,
ரசிகர் கூட்டத்தின் கவனத்தை தொடர்ந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்.
‘ஹீரோ;வை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே ராஜேஷ் கூறும்போது, “‘ஹீரோ’வைப் பொருத்தவரை, ஆரம்ப கட்டத்திலிருந்தே படக்குழுவே படத்தை கொஞ்சம் கொஞ்சமாக அடுத்த கட்டத்துக்கு உயர்த்தி வருகிறது.
சிவகார்த்திகேயன் பெரிய பிராண்ட், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவரது திரைப்படங்களை தவறாமல் பார்க்கும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை தக்கவைத்து கொண்டிருக்கிறார்.
ஹீரோ எனக்கு மிகவும் ஸ்பெஷலான திரைப்படம். ஏனெனில் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஆளுமைகளுடன் இந்த படத்தில் இணைந்திருக்கிறேன்.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் அபய் தியோல் போன்ற பெரிய நடிகர்களை கொண்டிருப்பது ஒரு பெரிய வரம். ஒரு திரைப்படத்தை ஆடம்பரமாக தயாரிக்க முடியும், ஆனால் நிபுணத்துவம் பெற்ற ஒரு குழுவைப் பெறுவது தான் மிகப்பெரிய விஷயம்.
நடிகர்கள் ஒரு கண்கவர் அம்சமாக தெரிந்தாலும், தொழில்நுட்பக் குழுவினர் இந்த படத்தின் மற்றொரு தூணாகும்.
இரும்புத்திரையில் பி.எஸ்.மித்ரனின் இணையற்ற கதைசொல்லல் மற்றும் திரைப்படத் தயாரிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. மித்ரனிடம் கதை கேட்கும் முன்பு, அவர் இரும்புத்திரை போன்ற ஒரு கதையுடன் தான் வரக்கூடும் என்று நான் கருதினேன். ஆனால் எனக்கு ஆச்சரியமாக ‘ஹீரோ’ முற்றிலும் மாறுபட்ட மற்றும் புதுமையான கதையாக இருந்தது.
கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் ஒரு பெரிய அந்தஸ்தைப் பெற்றுள்ளார், மேலும் இங்கே “ஹீரோ”வில் நல்ல பெயரை பெறவும் மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது” என்றார். என்றார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.