கதை, இயக்கம்; சத்ய சிவா, ஒளிப்பதிவு : ராஜா பட்டிசார், இசை : யுவன் சங்கர் ராஜா ,
கிருஷ்ணா,பிந்து மாதவி, எம்.எஸ்.பாஸ்கர், காளி வெங்கட்.
*****************
எம்.எல்.ஏ., மந்திரின்னா அரசு நிலம் அல்லது புறம்போக்கு நிலங்களை ஆட்டையப் போடனும்கிறது எழுதப்படாத சட்டம் னு ஆகிப் போச்சு. கோடைக்கானல் ஏரியாவில் செந்நாய்கள் நடமாட்டம் இருக்கிற ஏரியாவை ஒரு எம்.எல்.ஏ. தன்னுடைய கைத்தடிக்காக ஏகபோக உரிமையை அரசிடம் இருந்து வாங்கிக் கொடுத்திடுறார்.
என்ன சார் கழுகு 2 ன்னு பேர் வெச்சிட்டு செந்நாய்கள் னு கதை உடுறீங்கன்னு கேட்டா நம்மகிட்ட பதில் இல்ல சாமி! டைரக்டர் சத்ய சிவா ஏதோ சொன்னார் னு சொல்றாங்க. நம்ம காதுக்கு எட்டல.
சரி கதைக்கு வருவோம். கிருஷ்ணா.காளி வெங்கட் இந்த இரண்டு பேருக்கும் களவாணித் தொழில்.பொருத்தமான ஆளுங்கதான். போலீஸ்ல மாட்டிக்கிறாங்க. ஸ்டேஷன் ல ரகளை..இந்த இரண்டு பேரும் அங்கே இருக்கிற துப்பாக்கிகளை லவட்டிக் கொண்டு கோடைக்கானல் போயிடுறாங்க.அங்கேதான் மரம் அறுத்து பிழைக்கும் கூட்டத்தை சேர்ந்த பிந்து மாதவிக்கும் கிருஷ்ணாவுக்கும் லவ் ஸ்டார்ட் ஆகுது.
பிளேன் ஆக்சிடெண்ட்ல தலைவர் மாட்டிக்கிட்டார்,அது இந்த மலையில கிடக்கலாம்னு தேடி வந்த எம்.எல்.ஏ .கண்ல முதுமக்கள்தாழி படுது. அதுல பழங்காலத்து நகைகள் வைரங்கள். இது எம்.எல்.ஏ.க்கு கிடைக்கிதா ,கிருஷ்ணா,வுக்கு கிடைக்கிதா. பிந்து மாதவியின் லவ் என்னாச்சுங்கிறது தான் கதை.
கதையை காமடியா சொல்லணும் ,அதில டிராஜடியும் இருக்கணும்னு டைரக்டர் ஆசைப்பட்டிருக்கிறார்.
கேமராமேன் ராஜா பட்டிசார் அந்த மலையின் அழகு,பசுமை, பனி மூட்டம் அருவி இயற்கையின் கம்பீரம் இவைகளையெல்லாம் கண் குளிர காட்டியிருக்கிற அளவுக்கு யுவன் பிஜிஎம் ல பின்னிருக்கார்.
கிருஷ்ணா, காளிவெங்கட் ,இரண்டு பேரும் கடமையை செய்,காசு வாங்கு கரெக்டா பண்ணிருக்காங்க. பிந்துமாதவி பரவாயில்ல.
எம்.எஸ் .பாஸ்கர் அந்த வேலையைச்செய்வார்னு சத்தியமா எதிர்பார்க்கல. கிளைமாக்ஸ் ல அந்த மனுஷன் பண்ணுன காரியம் சரியா தப்பான்னு படம் பார்த்து தெரிஞ்சிக்குங்க.
சினிமா முரசத்தின் மார்க்; 2 / 5