
இரண்டு பேருமே கோயம்புத்துருதான்.!
இருந்தாலும் பாருங்க பிரச்னைன்னு வந்த பிறகு ஊரு குசும்பு வந்து குறுக்கால நின்னு முட்டிக்கும்.
அப்படித்தான் ஆகிப்போச்சு பாக்யராஜ்-சிபி சிக்கல்.
எழுத்தாளர்கள் சங்கத்துக்கு பாக்யராஜ் தலைவர் ஆனதும் திருட்டுக் கதைகள் பற்றிய கேஸ்கள் நிறைய வர ஆரம்பிருக்கு.
அதிலும் இரண்டு டாப் சிக்கல்களுக்கு நல்ல முறையில் தீர்ப்பு கிடைத்ததால் பாக்யராஜ்க்கு டிமான்ட்.
தலைவர் பிரச்னைகளை சால்வ் பண்ணிடுறாருப்பா என்று உதவி இயக்குநர்கள் ஆதாரங்களை திரட்டிக் கொண்டு செல்கிறார்கள்.
அண்மையில் சிபி ராஜ் நடிக்கும் படங்களில் ஒரு கதை தன்னுடையது என சொல்லி ஒருவர் பாக்யராஜிடம் புகார் கொடுத்திருக்கிறார்.
அதைவாங்கிப் பார்த்த தலைவர் பாக்யராஜ் சம்பந்தப்பட்ட சிபியை அழைத்து மேட்டரை சொல்லி இருக்கிறார்.
ஆனால் சிபிராஜ் “எங்களுக்கும் சங்கம் இருக்கு சார்! நான் அங்க பாத்துக்கிறேன்” என சொல்லி விட்டாராம்.
தன் பக்கம் ஸ்ட்ராங்கான எவிடென்ஸ் இல்லாமலா அப்படி சொல்லி இருப்பார் சிபி?
இருந்தாலும் சமாதானமாக போக வேண்டிய காரியத்துக்கு சல்லடம் கட்டிக்கொண்டு கோதாவில் இறங்கனுமா சிபி ராஜ்?












