ஒரு தனிமனிதன் எந்த அளவுக்கு தாங்க முடியுமோ அந்த அளவுக்கு சுமையைத் தாங்கினால் அவனது கழுத்துக் காப்பாற்றப்படும்.
அளவுக்கு மீறினால் தலைக்குத்தான் ஆபத்து.
இது உலக நியதி.
கவுதம் வாசுதேவ மேனன் சிறந்த இயக்குநர்.
கடன் வாங்குவதில் எல்லை தாண்டியவர் என்கிறார்கள். இதனால்தான் எனை நோக்கிப் பாயும் தோட்டா என்கிற படம் தியேட்டர்களைத் தொடவில்லை என்கிறார்கள்.
கோடிக்கணக்கில் கடனாம். இதை கட்டுவதற்காக மேலும் கடன் வாங்கத்தான் லண்டன் சென்றிருக்கிறார் .
கடனுக்கு மேல் கடனா?
லண்டன் வாழ் தமிழீழ தமிழர் தருவாரா? அவரே ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட இருக்கிறார் என்கிறார்கள்.
எப்படியோ தியேட்டரில் தோட்டா பாய்ந்தால் சரி.!