<a href="https://cinemamurasam.com/wp-content/uploads/2015/11/Nov-17-B.jpg">தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளான தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, உபதலைவர்கள் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் நேற்று காலை முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தனர். அவர்களை ஜெயலலிதா அன்போடு வரவேற்று, நடிகர் சங்கத்தின் நிலைமையை அக்கறையோடு கேட்டறிந்துகொண்டு புதிய நிர்வாகத்தை மனதாரா வாழ்த்தினார். நடிகர் சங்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மேஜர் சுந்தர்ராஜன் நிர்வாகத்தில் இருந்த பொற்காலத்தை இந்த புது நிர்வாகம் மீண்டும் கொண்டு வரவேண்டும். இந்த புது நிர்வாகம் அதை செய்யுமென்று நம்பிக்கை இருக்கிறது. சங்கத்தின் வளர்ச்சிக்காக அரசின் முழு ஆதரவு இருக்கும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா கூறினார். <img class="alignnone size-full wp-image-3971" src="https://cinemamurasam.com/wp-content/uploads/2015/11/Nov-17-B.jpg" alt="Nov - 17 - B" width="3708" height="3582" /></a>