கதை,திரைக்கதை,வசனம் இயக்கம்: ஆர்.விஜயானந்த் ,ஏ.ஆர் சூரியன். ஒளிப்பதிவு:வேல்முருகன் ,இசை ஸ்ரீகாந்த் தேவா.
சீமான்,வசி,பூஜாஸ்ரீ,சிங்கம் புலி,போஸ் வெங்கட், சந்தானபாரதி,
************
வைகை பாசனத்தை நம்பி இருக்கிற கிராமம் .முப்போகம் விளைகிற பூமி, அதில் தொழிற்சாலை கட்ட எம்.எல்.ஏ .யும் போஸ் வெங்கட்டும் முயற்சிக்கிறார்கள் .அதை தடுக்கப்போராடும் சீமான் கொலை செய்யப்படுகிறார். இவர் மரணத் தருவாயில் தனது மகனிடம் வாங்கிய வாக்குறுதிதான் கதையாகிறது. கதாநாயகனுக்கு உயிர் கொடுக்காமல் கதையை முடித்திருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள்.ஆர்.விஜயானந்த் ,ஏ ஆர் சூரியன். இவர்கள் படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்கள்.
சீமானிடம் எந்த காலத்தில் வாங்கிய கால்ஷீட்டோ அவரும் எம்.ஜி.ஆர் எபெக்ட்டில் பாட்டு பாடி நடித்து,சண்டை போட்டு கொலையுண்டு போகிறார். இவரது என்ட்ரி இடை வேளைக்குப் பிறகுதான்!
உப்புமா,புளியோதரை,தயிர்சாதம் ,சர்க்கரைப் பொங்கல் இவைகளை கலந்து ஒரு அயிட்டம் பண்ணினால் எப்படி இருக்கும் அப்படி ஒரு கதையை முற்பாதியில் சொல்கிறார்கள் சிங்கம் புலிக்கு அந்த புண்ணியத்தில் ஒரு பங்கு உண்டு. வசி,பூஜாஸ்ரீ இருவரும் அறிமுக நாயக,நாயகி.துடிப்பு துள்ளல் இருக்கிறது. வேல்முருகனின் ஒளிப்பதிவில் இவர்களும் காதலித்து பாட்டுப்பாடி ஸ்ரீ காந்த் தேவா இசையில் பாட்டும் பாடி படத்தை நிறைவு செய்கிறார்கள்.
எல்லோருமே புதுசு மாதிரி இருக்கு. செந்தமிழன் சீமான் முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்த முயற்சி செய்திருக்கிறார்.