அமெரிக்காவில் செயல்பட்டு வரும் மல்டி எத்னிக் அட்வைசரி டாஸ்க் ஃபோர்ஸ் அதாவது பல்வேறு இன மக்களுக்கான பணிக்குழுவின்செயல்பாடுகள் மிகவும் முக்கியமானது.
2019 ஆம் ஆண்டுக்கான இந்த நிறுவனத்தின் விருதுகள் வழங்கும் விழா இல்லினாயிஸ் மாகாணத்தின் சிகாகோ நகரில் நடைபெற்றது . அரசு முறை பயணமாக அமெரிக்கா வந்த தமிழக துணை முதல்வருக்கு அமெரிக்கவாழ் இந்திய சமூகம் , ‘உதய நட்சத்திரம்’ ( உதய சூரியன் இல்லியா?)எனும் விருது வழங்கி சிறப்பு செய்திருக்கிறது.. இதே விழா மேடையில், ‘இந்த ஆண்டின் சிறந்த பிலிம்மேக்கர்’ விருது டெல் கணேசுக்கு வழங்கப்பட்டது. இவர் திரைப்படத் தயாரிப்பாளர். திருச்சியை சேர்ந்தவர்.
சாதாரணமாக வேட்டி சட்டையில் காணப்படுகிற பன்னீர் செல்வம் இந்த விழாவில் கோட்டு சூட்டுடன் அமர்க்களமாக காணப்பட்டார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்றிருந்தபோது கோட்டு சூட்டு என அமர்க்களப்படுத்தினார் .நானும் சளைத்தவன் இல்லை என்கிற பாணியில் துணை முதல்வரும் சூப்பராக காணப்படுகிறார்.