‘ரெட்ட சுழி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆரி. தொடர்ந்து ஆடும் கூத்து, மாலைப்பொழுதின் மயக்கத்திலே, தரணி, நெடுஞ்சாலை, மாயா உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆரி, இலங்கையை சேர்ந்த நதியா என்ற பெண்ணை நீண்ட நாட்களாக காதலித்து வந்தார். நதியா பி.ஏ அக்கவுன்டன்சி பட்டதாரி.லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர் நதியா பி.ஏ பட்டதாரி, லண்டனில் ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.இந்நிலையில்,ஆரி-நதியா திருமணத்துக்கு இருவரின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்தார்கள். தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, இவர்கள் திருமணம் சென்னையில் ஒரு கோவிலில் இன்று காலை 10 மணிக்கு நடந்தது. முன்னதாக இவர்களது திருமண வரவேற்பு சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நேற்று மாலை நடந்தது. அதில், ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.தன காதல் திருமணம் குறித்து ஆரி பேசுகையில், ‘‘நானும், நதியாவும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டோம். இரண்டு பேருக்கும் பொதுவான நண்பர் மூலம் எங்கள் நட்பு உருவானது. கடந்த மூன்று வருடங்களாக நல்ல நண்பர்களாக பழகி வந்தோம். சமீபத்தில்தான் அது காதலாக மாறியது.இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு செய்தோம். எங்கள் முடிவை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டார்கள். எனவே இது, பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்கும் காதல் திருமணம் ஆகும்” என்கிறார்.