தே.மு.தி.க தலைவரும்,நடிகருமான விஜயகாந்த் மற்றும் அவரது மகன் சண்முகபாண்டியனும் இணைந்து ‘தமிழன் என்று சொல் ‘எனும் படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தை தமிழ் ஸ்டுடியோஸ் எண்டெர்டெயின்மென்ட் மீடியா நெட்வொர்க்ஸ் சார்பில், கோவர்தனி வரதராஜன் என்பவர் தயாரிக்கிறார்.
தற்போது, இப்படத்திற்கு நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது, இப்படத்தின் இசை – ஹிப்-ஹாப் தமிழா ஆதி, ஒளிப்பதிவு – கொலஞ்சி குமார், சண்டை பயிற்சி- ஸ்டண்ட் சில்வா, எடிட்டிங் -வரதராஜன், கலை -விஜய ஆதிநாதன், நடனம்- பிருந்தா, தினேஷ், ஸ்ரீதர், VFX- மோகன். இப்படத்தை புதுமுக இயக்குனர் அருண் பொன்னம்பலம் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை வரும் ஞாயிறு (22.11.2015)காலை
9 மணிக்கு ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடக்கிறது.












