
சபரி யாத்திரைக்குப் பின்னர் முழு வீச்சில் பயிற்சியில் இறங்கி இருக்கிறார் எஸ்.டி .ஆர்…. இணையத்தில் வெளியாகி இருந்த அவரது குத்துச்சண்டை பயிற்சி பெரிய அளவில் ரசிகர்களை சென்றடைந்திருக்கிறது.
மாநாடு படப்பிடிப்புக்குழுவினரும் நடிக நடிகையினரின் கால்ஷீட் தேதிகளை பெறுவதில் மும்முரமாக இருக்கிறார்கள்.இயக்குநர் வெங்கட் பிரபு,நாயகி கல்யாணி பிரியதர்சன்,
கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் தற்போது படப்பிடிப்பை தொடங்க இருப்பதால் இழந்த கால்ஷீட்டை வாங்குவது கடினமாக இருக்கிறது. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கேட்ட போது “எல்லா வேலைகளும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ஜனவரி கடைசி வாரத்தில் மாநாடு கொடி ஏற்றப்படும் ” என்பதாக நம்பிக்கையுடன் சொன்னார்.
நம்பிக்கைதானே வாழ்க்கை.! வாங்கப்பு சிம்பு, வந்து கொடிய ஏத்துங்க.!












