எழுத்து,இயக்கம் :பாலாஜி வைரமுத்து, இசை : சுந்தரமூர்த்தி, ஒளிப்பதிவு: யுவா ,
சந்தோஷ் பிரதாப் ,கோகுல்,அஷ்வின் ஜெரோம் ,மதுஷாலினி ,சனா அல்தாப் ,சீமான்,ராஜா,ஜீவா ரவி ,ஹரிணி,
********************
பெயர் என்னவோ பஞ்சாங்கம் மாதிரி பழைய தோற்றத்தில் இருந்தாலும் உள்ளே சரக்கு அல்ட்ரா மாடர்னாகத் தான் இருக்கிறது.
படத்தின் பெயருக்கு அறிமுக இயக்குநர் பாலாஜி வைரமுத்து சொன்ன விளக்கம் ‘சிவாயநம என்பது….!.பஞ்சபூதம் என்ன என்று கேட்டால் “பேய் ,பிசாசு, கொள்ளி வாய்ப்பேய்,காட்டேரி, என்று சொல்லக்கூடிய அறிவார்ந்தவர்கள் அதிகமாக இருக்கிற நாட்டில் ” இதென்ன புதுவிதமான பஞ்சாமிர்தமா ?” என டைட்டிலைப் பற்றி கேட்காமல் இருந்தால் சரி.
நிலம், நீர்.நெருப்பு ,காற்று ,ஆகாயம் என்பதே பஞ்சபூதம் என்பார்கள்.
இந்த ஐந்துக்கும் ஐந்து பேரை ஒவ்வொரு குணமுள்ளவர்களாக காட்ட ஆசைப் பட்டிருக்கிறார் இயக்குநர் .இவரது ஆசைக்கு அந்த கேரக்டர்கள் பொருந்துகின்றனவா என்பதை ஆய்வு செய்வது கடினம்.
இரண்டு பெண்,மூன்று ஆண் என ஐவர் ஒரு கட்டத்தில் நண்பர்கள் ஆகிறார்கள். அவர்களில் ஒரு பெண்ணிடம் ஆதிகாலத்து புத்தகம் ஒன்று இருக்கிறது. அவர்களுக்கு பிடித்த ஒரு பக்கத்தை தேர்வு செய்து அதை படிப்பது என ஒரு விளையாட்டு.ஐவரும் படிக்கிறார்கள். வித்தியாசமான விபரீத வரிகள். நமக்கும் ஆர்வம். என்னதான் நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ளுகிற ஆசை.
என்னடா ஒன்னு கூட பாஸிட்டிவா வரலே என்கிற ஆதங்கமுடன் பைக்கில் ஒருவர், ஜீப்பில் நால்வர் என பயணிக்கிறார்கள். வழியில் அவர்களுக்கு எத்தகைய ஆபத்துகள் இருந்தன என்பதுதான் கதையும்,திரைக்கதையும்.!
எந்த அளவுக்கு பாசிட்டிவ்வா நினைக்கிறோமோ அந்த அளவுக்கு நல்லது, நெகட்டிவ்வா நினைத்தால் கெட்டதையும் சந்திக்க வேண்டும் என்பதை சொல்லத்தான் படக்குழு படாத பாடு பட்டிருக்கிறது. இது ஒரு திரில்லர் மூவி. எந்த அளவுக்கு மக்கள் ரசிப்பார்கள் என்பதை தியேட்டர்கள்தான் சொல்லவேண்டும்.
சந்தோஷ் பிரதாப் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்தப்படம் தன்னை உயரம் கொண்டு செல்ல உதவும் என நினைத்திருக்கிறார்.இவரைப்போலவே எல்லோரும் பாசிட்டிவாக நினைத்துதான் நடித்திருக்கிறார்கள். வலிந்து குறைகளை தேட வேண்டிய அவசியம் இல்லாமல் நிறைவாகவே இருந்தாலும் பிற்பாதியில்சற்று தொய்வு. சீமான் என்பவர் வில்லன். சரக்கு முறுக்குதான்!
இம்மாதிரியான படங்களுக்கு ஒளிப்பதிவும் இசையும் முக்கியம். ஒளிப்பதிவாளர் யுவா இரவு நேரங்களுக்கு ஏற்றாற்போல டோன் கொடுத்திருக்கிறார். ஆனால் இசை அமைப்பாளர் சுந்தரமூர்த்தி சுகமான சுமை.
நமசிவாய வாழ்க ..நாதன் தாள் வாழ்க.!