
எழுத்து இயக்கம் : ராஜவேல் கிருஷ்ணா , ஒளிப்பதிவு : பாக்கி , இசை :பைசல் .
சார்லி,மைம் கோபி , வினோத், சின்ன காக்கா முட்டை ரமேஷ்,அப்பா நாசத் ,கோகுல் ,ஜார்ஜ்
****************************
ஆரம்பப் பள்ளியிலிருந்து ஆத்திசூடி,ஆறாம் வகுப்பிலிருந்து திருக்குறள் , இப்படி ஆரம்பமாகிறது நமது ‘மாரல் ‘கல்வி முறை.
“படிக்கல,நான் கல்லு உடைச்சி பொழப்பு நடத்துறேன். என் புள்ளையும் என்ன மாதிரி கல்லு உடைக்க வந்திரக்கூடாது ” என்று மைம் கோபி , சார்லி ,ஜார்ஜ் ஆகிய மூணு அப்பன்களும் தன்னோட பிள்ளைகளை படிக்க பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
அவ்வளவாக படிப்பு ஏறாத ரமேஷ், நாஸத்,உள்ளிட்ட மூணு பொடியன்களின் கணக்கு வேறாக இருக்கிறது. பட்டணத்துக்குப் போயி வேலை பார்த்து வெயிட்டான காசுக்காரனாக ஊருக்கு திரும்பனும்னு ஓடிப் போயிடுறானுங்க. இந்த சிறுவர்களை சுற்றித்தான் கதை போகிறது.
வருசக் கடேசியில் பார்த்த பட்ஜெட் படம். அவ்வளவாக செலவு வைக்காத நடிக,நடிகையர் . ஃபாரின் போயி கார்களை தூக்கி அடிக்கல.பார் டான்ஸ் இல்ல. அப்புறம் என்னய்யா தமிழ்ப்படம்.?
கதையை நம்பி எடுத்திருக்காங்க. மைம் கோபி,சார்லி,ஜார்ஜ் இவங்களுக்கெல்லாம் ரசிகர் மன்ற பின்புலம் இல்ல. ஆனா நல்ல திறமையான நடிகர்கள். வேர்வையை சிந்தி நடிச்சிருக்காங்க. மூணு பொடியன்களையும் சும்மா சொல்லக்கூடாது. அதிலும் அந்த குட்டைப் பையன்,இவனோட பார்வை, மத்த ரெண்டு பொடியன்களுக்கு சொல்ற ஐடியா சிறப்பா வருவாய்ங்க. சரவணபவன் ஓட்டலில் வேலைக்கு சேர்ந்து அவனுக படுற பாடு இதுக்கு முன்னாடியே வேற படத்தில பார்த்திருந்தாலும் இந்த படத்திலேயும் சமுதாயத்தை கேள்வி கேட்கிது .”என்னடா சட்டம் .லஞ்சமும் பணத்திமிரும் ஒரு உசிரை வாங்கிருச்சே..லஞ்சம்னா அது போலீஸ்தான் என்பதை இந்த படத்திலும் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா அழுத்தமா பதிவு செய்திருக்கார்.
இந்த வருடத்தின் கடைசியில் பத்திரிகையாளர்கள் பார்த்த படமாக இருந்தாலும் ஆங்கிலப் புத்தாண்டில்தான் தியேட்டர்களுக்கு வருகிறது.
புத்தாண்டு வாழ்த்துகள் .












