
பந்திப்பூர் புலிகள் காப்பகம்.
கர்நாடகாவின் அடர்ந்த வனப்பகுதி. புலிகள் காப்பகமாக இருக்கிறது. இங்கு சபாரி அனுமதிக்கப்படுகிறது. புலிகள் ,யானைகள்,சிறுத்தைகள் என எல்லா மிருகங்களும் இங்கு சுதந்திரமாக வாழ்கின்றன. 
கர்நாடகத்தையும் கேரளத்தையும் இணைக்கக்கூடிய ஒரு இரும்புப்பாலம் இருக்கிறது.இந்த பாலத்தின் வயது 100 வருஷம். இங்கே டாக்குமெண்டரி படம் எடுப்பதற்கு கர்நாடக அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. ஆனால் மத்திய அரசு அனுமதி மறுத்திருப்பதாக இயற்கை ஆர்வலர் பிரசாந்த் கூறுகிறார். 
படப்பிடிப்பு நடத்துவது பாதுகாப்பானது இல்லை. பாதுகாப்பு அளிக்கிறோம் என்கிற பெயரில் விலங்குகளுக்கு இடையூறு செய்வார்கள்.இயற்கை வளத்தை அழித்து விடுவார்கள் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள் .
இரண்டுநாள் எடுக்கப்படுகின்ற டாக்குமெண்டரி படத்தில் நடிப்பதற்காக ஸ்பெஷல் கெஸ்ட் என்கிற பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.












