தனுஷ் கதாநாயகனாக நடிக்க சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் புதிய படம் “தனுஷ் 43 “
டி.ஜி. தியாகராஜனின் – சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் கதாநாயகனாக நடித்து பொங்கலுக்கு வெளியான படம் பட்டாஸ். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் இணைந்து ஒரு புதிய படத்தை தயாரிக்கிறது சத்யஜோதி ஃபிலிம்ஸ் .
இந்த படத்தை துருவங்கள் பதினாறு , மாஃபியா , நரகாசுரன் போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார் .
தனுஷின் 43 வது படத்தின் மூலம் தனுசுடனும், சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்துடனும் கார்த்திக் நரேன் முதன்முறையாக இணைகிறார் .
தனுஷ் -ராம்குமார் திரைப்படம் மெகா பட்ஜெட் மற்றும் முன் தயாரிப்பு பணிகளுக்காக அதிக நேரத்தேவை காரணமாக சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் “தனுஷ் 43 ” அந்த திரைப்படத்திற்கு முன்னதாக வெளியாகிறது .
பொல்லாதவன் , ஆடுகளம் , மயக்கம் என்ன மற்றும் அசுரன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் 5 முறையாக தனுஷுடன் கைகோர்க்கிறார் .தற்போது இப்படத்தின் கதாநாயகி மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெறுகிறது .வரும் அக்டோபர் மாதம் திரையிட திட்டமிட்டுள்ளனர். கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாபியா விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.