சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த படம் நெற்றிக்கண்.
இந்த படத்தை கவிதாலயா தயாரித்திருந்தது .இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார்.கதைக்கு சொந்தக்காரர் இயக்குநர் விசு. ரஜினியுடன் லட்சுமி ,சரிதா, மேனகா (கீர்த்தி சுரேஷின் அம்மா )விஜயசாந்தி ஆகியோர் நடித்திருந்தார்கள் 1981 -ல் வெளிவந்த படம்.
விழா கொண்டாடிய இந்த படத்தை தனுஷ் ரீ மேக் செய்யப்போவதாக சில செய்திகள் வந்திருந்தன.
அந்த செய்திகளின் அடிப்படையில் இயக்குநர் ,கதாசிரியர் ,நடிகர் விசு ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறார். சம்சாரம் அது மின்சாரம் ,தில்லு முல்லு ,இன்னும் பல வெற்றிப்படங்களை தந்திருப்பவர்தான் விசு.
“கவிதாலயாவிடம் இருந்து நெற்றிக்கண் ரீமேக் உரிமையை நடிகர் தனுஷ் வாங்கியிருந்தால் அந்த படத்தின் கதாசிரியனான இந்த விசுவிடமும் அனுமதி வாங்கி இருக்க வேண்டும்.
தில்லு முல்லு ரீமேக் விஷயத்திலும் கவிதாலயா இதே தவறை செய்திருக்கிறது.அதற்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.
நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்யப்போகிறார்கள் என்பது தவறான செய்தியாக இருந்தால் கவலைப்படப்போவதில்லை.
ஆனால் அது உண்மையான செய்திதான் என்கிற பட்சத்தில் தனுஷ் என்னிடம் அனுமதி வாங்காததற்காக நான் நீதி மன்றத்துக்கு போவேன் என்பது உறுதி !” என்கிறார் விசு.