
கதை இயக்கம் :பாரதிராஜா ,வசனம் ;மதன் கார்க்கி ,
லண்டனில் குடும்ப நெருக்கடி காரணமாக வீட்டிலிருந்து தற்கொலை செய்துகொள்கிற மனநிலையுடன் வெளியேறுகிற அழகிய பெண், மகனால் ஏமாற்றப்பட்ட வெள்ளந்தியான ஒருவர் முதியோர் காப்பகத்தை விட்டு வெளியேறுகிறார் .இவர்கள் இருவரும் சந்தித்து லண்டனை விட்டு வெளியேறி ஒரு இலக்கை அடைகிறார்கள்.
இலக்கு நோக்கிய பயணத்தில் அந்த இருவருடனும் அரூபமாக ஒருவர் பயணிக்கிறார் ,அவர் வசனம் எழுதிய மதன் கார்க்கி. மனங்களை அழகாக பிரதி எடுத்திருக்கிறார். பயணத்தின் முடிவு என்ன? அதுதான் கதை.
அழகிய பெண்ணாக .முதியவராக இயக்குநர் இமயம் பாரதிராஜா. இவர் ஒரு எழுத்தாளரும் கூட.! இந்த இருவருக்கான பின்னணியை முதல் பாதியில் சொல்லிவிட்டு பிற்பாதியில் அந்த அழகிய பயணத்தை காட்டியிருக்கிறார்கள்.
சதை கிடையாது. இளம் பெண்ணின் தேடல் இருக்கிறது. ஒரு முதியவரின் கவலை தோய்ந்த கடமை இருக்கிறது. ஜால்ரா தட்டுகிறான் இந்த விமர்சகன் என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அழகிய, வித்தியாசமான ,இரண்டு நேர்கோட்டில் பயணிக்கிற இரு மனங்களின் பயணத்தைப் பார்க்க முடிந்தது.தமிழ்ச்சினிமாவின் வித்தியாசமான படம். எத்தனை பேருக்கு விருப்பமாக இருக்கும்? இன்றைய ரசிகர்களின் ரசனை வேறாக வளர்க்கப்பட்டிருக்கிறது. அவர்களது ரசனை வேறு.!
ஓல்டு மேன் என்பதின் சுருக்கமே ஓம் என்கிற புனை பெயர். ஈழத்தமிழர்கள் அடிக்கடி சொல்கிற சொல்லும் அதுதான். அது ‘ஆம் ‘என்கிற சொல்லின் பிறழ்வு.
எத்தனையோ உச்ச நடிகர்களை இயக்கிய பெருமை பாரதிராஜாவுக்கு உண்டு. உடலும் மனமும் ஒத்துழைக்க முடியாத பனிப்பிரதேசம், பாறைகள் சூழ்ந்த இடங்கள் என கஷ்டங்களை பார்க்காமல் நடித்திருக்கிறார். “நீயோ வாழ்க்கையின் தொடக்கத்தில் இருக்கிறே ,நானோ வாழ்க்கையின் முடிவில் இருக்கிறேன் ” என்று பேசுகிறபோது அந்த வார்த்தைகளின் ஆணி வேர் அடிமனதாகிறது. அதுதான் சத்தியமான உண்மை என்றாலும் அந்த இளகிய பெண்ணின் மனது அழுகிறது. அப்பனை ,அன்பனை ,நண்பனை ,ஆதரவாக நின்றவனை இழக்கிறோம் என்கிற வேதனை.
வெண்பாவாக நட்சத்திரா நடித்திருக்கிறார். ஜோ மல்லூரியின் வாழ்க்கை அந்நிய நாட்டின் வாழ்வியலையும் காட்டுகிறது பாரதிராஜாவின் மனைவியாக மவுனிகா நடித்திருக்கிறார்.
அநியாயத்துக்கு குளோசப் காட்சிகள்.
சினிமா முரசத்தின் மார்க் மனதுக்குள் இருக்கிறது.












