
நெடிய இடைவெளிக்குப் பின்னர் இன்றுதான் தளபதி விஜய் ‘புல் சூட்’டில்.!
உற்றமும் சுற்றமும் நிறைந்திருக்க விழா மேடைக்கு முன்பாக பிரமுகர்களுடன் அமர்ந்து விட்டார்.
கடுமையான பாதுகாப்பு.
வந்திருந்தவர்களில் முதன்மையானவர்கள் என்றால் அதர்வா முரளியை முக்கியமாக குறிப்பிடலாம். மாஸ்டர் தயாரிப்பாளர் பிரிட்டோவின் ஒரே மகளை காதல் மணம் புரியவிருப்பது அதர்வாவின் தம்பிதானே!
அடுத்தவர் விக்னேஷ் சிவன் ,லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதலர்.
இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஆட்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள்.
விஜய்யின் பெற்றோர் வந்தாச்சு. மனைவி சங்கீதாவும் வந்தாச்சு.
தொகுப்பாளினி ரம்யாவுக்கு ஒரு ஆசை.
“தளபதியை கட்டி அணைக்கணும்”
ஆகா அப்படியே ஆகட்டும்.! இன்றைய இரவு உறக்கம் அவருக்கு இன்பக்கனவில்.!
“விஜய் சாருக்காக ரெண்டு பாட்டு.அதில் ஒன்னு லவ் சாங். அது நான் அவரை காதலிச்சு எழுதுனது !” என்றார் விக்கி. “நயன் கோச்சுக்கப்போறாங்கப்பா!”












