
கொரானாவினால் உலகமே அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறது.
உலக அளவில் 187 கோடியே 75 லட்சம் பேர் வேலை வாய்ப்புகளை இழப்பர் என்கிறது செய்தி.
பெங்காலி நடிகை மிமி சக்ரவர்த்தி ஒரு படப்பிடிப்புக்காக இங்கிலாந்து சென்றிருந்தார். வேலை முடிந்ததும் விமானத்தில் கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இன்டர்நேஷனல் விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு எல்லாவிதமான சோதனைகளும் நடத்தப்பட்டன. இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்.
“இவரை வீட்டிலேயே 15 நாட்களுக்கு தனிமைப் படுத்தும்படி “சொல்லியிருக்கிறார்.
வீட்டில் உள்ளவர்கள் யாரும் தன்னை சந்திக்க வேண்டாம் என்று மிமி சக்ரவர்த்தி கேட்டுக்கொண்டிருக்கிறார்.
சிறந்த முன்னுதாரணம்.












