மீனாட்சி சுந்தரம் விசுவநாதன். விசு என்று சுருக்கமாக அழைக்கப்படடவர்.
சிறந்த நடிகர் நாடகம்,திரை என இரண்டு உலகங்களிலும் சிறந்து விளங்கியவர்..நல்ல மனிதர்.
தொடக்கத்தில் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரிடம் உதவியாளராக இருந்தார்.
மேடை நாடகங்களில் இவருக்கென தனி இடம் இருந்தது. இவரது நாடகங்கள் ,திரைப்படங்கள் எல்லாமே நகைச்சுவை கலந்த குடும்ப படங்களாகவே இருக்கும்.
ஆபாசம் இருக்காது என மக்கள் நம்பி வந்தார்கள்.
இவரது சகோதரர்கள் கிஷ்மு ,குரியகோஸ் ரங்கா, ,ராஜாமணி ஆகிய மூவரும் அண்ணனுக்கு துணையாக இருந்தார்கள்.
திரைப்பட தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்திருக்கிறார்.
சிறுநீரக கோளாறினால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று மதியம் வீட்டிலேயே மரணம் அடைந்துவிட்டார். சம்சாரம் அது மின்சாரம் படத்தின் இரண்டாவது பாகம் எழுதி வைத்திருந்தார்.